Home /News /lifestyle /

உங்களை யாருமே மதிப்பதில்லை என நினைக்கிறீர்களா..? இப்படி செய்தால் மரியாதை தானாக கிடைக்கும்..!

உங்களை யாருமே மதிப்பதில்லை என நினைக்கிறீர்களா..? இப்படி செய்தால் மரியாதை தானாக கிடைக்கும்..!

அலுவலகம்

அலுவலகம்

சமூகத்தில் மதிப்புடனும், மரியாதையுடன் நம்முடைய வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் சில உளவியல் தந்திரங்களை ( psychological tricks) உங்களது வாழ்வில் பாலோ செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எதிர்பாராமல் செய்யும் உதவி, மற்றவர்களின் அழைப்பிற்கு உரிய நேரத்தில் பதிலளித்தல், உறுதியான மற்றும் நம்பிக்கையான பேச்சு, சுய ஒழுக்கம் போன்ற பலவற்றை உங்களது வாழ்வில் நீங்கள் கடைப்பிடித்தாலே போதும். சமூகத்தில் மற்றவர்கள் உங்களை மதிப்புடனும், மரியாதையுடன் நடத்துவார்கள் என்பதில் மாற்றமில்லை.

சமூகத்திற்கு யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்றெல்லாம் பார்க்கத் தெரியாது. ஒருவரின் குணாதிசயங்கள் பிடிக்கலேன்னா போதும். அவருக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. ஒரு சிலர் பணம் இருந்தால் மட்டுமே மதிக்கப்படுகிறீர்கள். பெரும்பாலும் இந்நிலைமை இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக மக்கள் தங்களுடைய செயல்களாலும், அவர்களின் வயதின் காரணமாகவும் மதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில் மதிப்புடனும், மரியாதையுடன் நம்முடைய வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் சில உளவியல் தந்திரங்களை ( psychological tricks) உங்களது வாழ்வில் பாலோ செய்ய வேண்டும். இதோ என்னென்ன அவை? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

உங்களது நேரத்தை மதித்தல்:

நேரம் பொன் போன்றது. தொலைத்து விட்டால் நமக்கு கிடைக்காது என்பதை மனதில் வைத்து உங்களது நேரத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பது, இந்த நேரங்களில் உங்களுக்கு யார் கால் செய்தோ? அல்லது நேரில் வந்தோ? பேசினால் முறையாக வரவேற்பதோடு, என்னவென்று கேட்பது அவசியம். ஆனால் நம்மில் சிலர் இதை முறையாகப் பின்பற்றுவதில்லை.

உதாரணமாக அலுவலக நேரத்தில் நமக்கு என்ன வேலை கொடுத்தாலும் அசராது உரிய நேரத்தில் செய்து முடித்துவிடுவோம். அதே சமயம் பணி நேரம் முடிந்துவிட்டால்.. சொல்லவே தேவையில்லை. யார் கால் செய்தாலும், மெசேஜ் அனுப்பினாலும் எந்தவித பதிலையும் உரிய நேரத்தில் கொடுப்பதில்லை. இந்நிலை பலருக்கு உங்கள் மீது மரியாதையைக் குறைக்கும். எனவே இதனை மாற்றிக் கொள்ள முயலுங்கள்.



உறுதியான மற்றும் நம்பிக்கையான பேச்சு:

உங்களது பேச்சுத் திறமை தான் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும். பொது இடங்களில், அலுவலகங்களில், உறவினர் மற்றும் நண்பர்களுக்கிடையே நீங்கள் பேசும் வார்த்தைகள் உறுதியானதாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுவது, வார்த்தைகள் திக்குமுக்காடுவது போன்றவையெல்லாம் உங்களது தன்னம்பிக்கையைக் குறைக்கக்கூடும். எனவே உறுதியாக மற்றும் நம்பிக்கை தரும்படியான வார்த்தைகளை நீங்கள் பேச வேண்டும். இது உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்த உதவும்.

உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்..? தெரிந்துகொள்ளுங்கள்

எப்போதும் ஒரே மாதிரியாக இருத்தல்:

வாழ்க்கையில் யாருக்கும் மதிப்பும் மரியாதையும் தானாக வராது. ஒருவரின் பழக்க வழக்கங்களும், குணாதிசயங்கள் தான் இவர்களை உயர்த்தும். பொதுவாக ஒரு சிலர் சந்தர்ப்ப சூழல்களுக்காக தங்களுடைய மதிப்பை மாற்றிக்கொள்வார்கள். சில விஷயங்களில் சமரசமாக போய்விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு. நீங்கள் யாருக்காகவும் எப்போதும் உங்களுடைய பழக்க வழக்கங்களையோ? உங்கள் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது. அதே சமயம் மாற்றவும் கூடாது. உங்களுக்கு மதிப்பை தருவதற்குப் பதில் நேர்மையின்மையை வெளிப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



மரியாதையுடன் இருத்தல்:

நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மரியாதையுடன் இருப்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய பேச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் உங்களது உயர் அதிகாரியோ? அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ? சென்றால் கொஞ்சம் நம்பிக்கையாக மற்றும் மரியாதையாக பேச வேண்டும்.

அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

உங்களின் சுய மரியாதையைத் தொலைத்துவிடாதீர்கள்:

அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் யாரும் கெட்டவர்களும் இல்லை. சந்தரப்ப சூழல்களால் சில நேரங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இந்த சூழலில் மற்றவர்களுக்காக ஒரு போதும் உங்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாதீர்கள். பொதுவாக ஒரு சிலர், சொந்த விஷயங்களுக்காக அலுவலக வேலைகளை முறையாக முடிக்க மாட்டார்கள். நீங்கள் இதுப்போன்று ஒரு போதும் இருக்கக்கூடாது. எதையும் செய்வதற்கு முன்னர் யோசித்து செய்யுங்கள்.



 

ஒருபோதும் சுயமரியாதையை இழந்து விடாதீர்கள். அதே சமயம் தவறு செய்தால் ஒத்துக்கொள்ளுங்கள்.மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் விட்டுவிடுங்கள். இது உங்களது வாழ்க்கையை நிச்சயம் நன்றாக இருக்கும். உங்களுக்கு மதிப்பும் தானாக வரக்கூடும்.

இது போன்று சில விஷயங்களை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் நடத்துவார்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Office, Self Respect

அடுத்த செய்தி