Home /News /lifestyle /

கர்ப்ப காலத்தில் இந்த தொற்றுகளால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கக் கூடும்..!

கர்ப்ப காலத்தில் இந்த தொற்றுகளால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கக் கூடும்..!

கர்ப்பகால தொற்றுகள்

கர்ப்பகால தொற்றுகள்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இந்த ரூபெல்லா வைரஸ் தொற்று ஏற்படக் கூடும்

கர்ப்பம் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும். அனைத்து பெண்களின் விருப்பமும் இதுதான். எனினும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில வகை தொற்றுகள் என்பது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. சில நேரங்களில், மிகச் சிறிய தொற்றுகள் கூட தாய் மற்றும் குழந்தையின் நலனை பாதிக்கக் கூடும்.

கருச்சிதைவு, குறைப் பிரசவம் அல்லது பிறப்பு குறைபாடுகள் போன்ற பிரச்சினை ஏற்படக் கூடும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகள் என்பது கருவின் உள்ளே வளரும் குழந்தைகளுக்கும் பரவக் கூடும்.

தொற்றுகள் எப்படி பாதிக்கிறது :

சரும தொற்றுகள், சிறுநீர் குழாய் தொற்றுகள் அல்லது மூச்சுக் குழாய் தொற்றுகள் என்பது பெரிய அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது. முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக இவற்றை குணப்படுத்தி விடலாம். அதே சமயம், இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமலும், இதை கண்டுபிடிக்க இயலாமலும் போகும் சமயங்களில் கர்ப்பத்திற்கு ஆபத்தான நிகழ்வுகள் நடைபெறக் கூடும்.

குறிப்பாக, கருச்சிதைவு, எடை குறைவாக குழந்தை பிறப்பது மற்றும் உடல் உறுப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். தொற்றுகளை தொடக்கத்திலேயே கண்டறிவதும், அதற்கு சிகிச்சை பெறுவதும் தான் இதுபோன்ற ஆபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள் ஆகும்.



சைடமெகுளோ வைரஸ் தொற்று :

சைடமெகுளோ வைரஸ் தொற்று அல்லது சிஎம்வி எனப்படும் தொற்று என்பது பச்சிளம் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த வகை பாதிப்புகளை எதிர்கொள்ளும் கர்ப்பிணி பெண்களிடம் இருந்து குழந்தைகளுக்கும் அது பரவலாம். இதனால், கண்களின் ரெடினாவில் பாதிப்பு, மிக சிறிய தலை, மஞ்சள் நிற சருமம் அல்லது எடை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ரமலானில் கர்ப்பிணிகள் நோன்பை கடைபிடிக்கலாமா? நோன்பை தவிர்க்க யாருக்கு அனுமதி?

ரூபெல்லா வைரஸ் தொற்று :

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இந்த ரூபெல்லா வைரஸ் தொற்று ஏற்படக் கூடும். இது கருச்சிதைவு, குறைப்பிரசவம் அல்லது குழந்தை இறப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்கள், காதுகள், இதயம் ஆகிய உறுப்புகளில் கோளாறுகள் ஏற்படலாம். ஆட்டிஸம் குறைபாடு இருக்கக் கூடும். கர்ப்பிணி பெண்கள் இதற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குரூப் பி ஸ்டெர்ப்டோ கோகஸ் தொற்று :

இது பாக்டீரியா தொற்றால் ஏற்படுவது ஆகும். இயல்பாகவே உடலில் இருக்கும் இந்த பாக்டீரியா அநேக நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகள் சுகப்பிரசவம் மூலமாக பிறக்கும்போது இந்த தொற்று தாயிடம் இருந்து பரவக் கூடும். இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் காதுகேளாமை அல்லது பார்வைக் கோளாறுகள் ஏற்படலாம்.



ஜிகா வைரஸ் :

பகலில் கடிக்கும் ஏடீஸ் வகை கொசுக்களின் மூலம் இந்த தொற்று பரவக் கூடும். ஆண்களுக்கு இந்த பாதிப்பு இருந்து, கர்ப்பிணி பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போதும் கூட இது பரவும். தாயிடம் இருந்து இது குழந்தைக்கு பரவும்போது மூளை வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படலாம்.

டோக்ஸோபிளாஸ்மோசிஸ் தொற்று :

நோய்த்தொற்று உள்ள எலிகள் மற்றும் பறவைகளை உட்கொள்ளும் பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவக் கூடும். இதனால், கர்ப்பிணி பெண்கள் பூனைகளை கையாளுவதை தவிர்க்க வேண்டும். அரை வேக்காடு இறைச்சி மற்றும் தண்ணீர் போன்றவற்றின் மூலமாகவும் இது பரவக் கூடும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Viral infection

அடுத்த செய்தி