Home /News /lifestyle /

உலக தாய்ப்பால் வாரம் : பாலூட்டும் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்! 

உலக தாய்ப்பால் வாரம் : பாலூட்டும் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்! 

பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை மற்றும் தங்கள் நலனுக்காக கடைபிடிக்க வேண்டிய காரியங்கள்

பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை மற்றும் தங்கள் நலனுக்காக கடைபிடிக்க வேண்டிய காரியங்கள்

World Breastfeeding Week 2022: பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இந்த 5 விஷயங்கள் பதிலளிக்கும்.

    புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கலாம். பச்சிளம் குழந்தைக்கு அதன் பிரதான உணவான தாய்ப்பால் போதுமான அளவு கிடைத்திருக்கிறதா?, குழந்தைக்குச் சரியான முறையில் தாய்ப்பால் கொடுத்தோமா? என பல்வேறு குழப்பங்கள் எழலாம். முதல் குழந்தை பெற்றெடுத்த அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது என்பது இயல்பாக வந்துவிடாது, தினந்தோறும் செயல்முறை மூலமாக அவர்களே தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

    எனவே ஒவ்வொரு இளம் தாய்மார்களும் தங்களது குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதற்கான வழிமுறைகளில் வேறு வேறு விதமான தந்திரங்களைக் கையாள்கின்றனர். தற்போது ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.

    1. வெளிப்படையாக இருங்கள்:

    புதிய தாய்மார்கள் எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக வயதில் மூத்த மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் சில அறிவுரைகளை உங்களுக்கு வழங்குவார்கள். ஆனால் தாய்ப்பால் புகட்டும் போது, அவர்கள் சொல்வது அனைத்தையுமே முயன்று பார்க்க எண்ணாதீர்கள். அந்த யுக்தி உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் சரியானதா? என்பதைப் பொறுமையாக யோசித்துச் செயல்படுத்துவது நல்லது. பொதுவாகப் பெண்கள் சொல்லும் கருத்துக்களை மட்டும் கேட்டுப் பின்பற்றாமல், தாய்ப்பால் கொடுப்பது பற்றிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    ஆரோக்கியமான உணவு முக்கியமானது : குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே உணவு ஆகும். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தாய்ப்பால் மூலமாகவே கிடைக்கிறது. ஆகவே, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் எந்தவொரு உணவுப் பொருளும் தாய்ப்பால் ரூபத்தில் உங்கள் குழந்தைக்கு சென்று சேரும். இத்தகைய சூழலில், நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடவில்லை என்றால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும்.


    2. ஆரோக்கியமான உணவு முறை அவசியம்:

    முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தைக்குக் கொடுக்கப்படும் தாய்ப்பாலானது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது குழந்தைக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்றால் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதோடு, நிறையத் தண்ணீர் குடிக்கவும் வேண்டும். தாய்மார்கள் சாப்பிடும் உணவே தாய்ப்பாலாகக் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறது என்பதால், தாய்மார்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடவில்லை என்றால், அது உங்களை மட்டுமல்ல உங்கள் குழந்தையின் உடல் நலனையும் பாதிக்கும்.

    Also Read :சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க...

    3. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை எவ்வாறு பிடிப்பது?

    தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதைத் தாய்மார்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் போது தாயும், சேயும் வசதியான நிலையில் இருப்பது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது, தொட்டில் பிடி, கிராஸ்ஓவர் ஹோல்ட், ஃபுட்பால் ஹோல்ட் மற்றும் பக்கவாட்டு நிலை போன்ற நிலைகளை முயற்சிகளாம். தாய்ப்பால் கொடுக்கும் போது பிள்ளையைச் சரியான நிலையில் பிடிப்பது, குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் குடிக்க உதவுவதோடு, தாய்க்கு ஏற்படும் முலைக்காம்பு வலியைத் தடுக்கவும் உதவுகிறது.

    வெறுப்படைய வேண்டாம் : எல்லா நாட்களிலும் உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகவே இருந்துவிட முடியாது. சில சமயங்களில் ஏமாற்றங்களும் ஏற்படக் கூடும். அத்தகைய சூழலில், வெறுப்படைய கூடாது. நண்பர்களை சந்திப்பது, பிடித்த இடங்களுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மனதை அமைதிப்படுத்த வேண்டும்.


    4. தாய்ப்பால் கொடுக்கும் மனநிலை அவசியம்:

    தாய்ப்பால் கொடுக்கும் போது மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். எனவே தினமும் சிறிது நேரம் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஓய்வின் போது உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனதை அமைதி செய்ய உதவும். இது உங்கள் குழந்தைக்குச் சிறப்பான முறையில் உணவளிக்க உதவுவதோடு, தேவையான அளவு பால் சுரக்கவும் உதவும். குழந்தைக்குப் பால் புகட்டும் நேரத்திலிருந்து ஓய்வெடுக்க பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலைச் சேமித்து குழந்தைக்குப் புகட்டலாம்.

    Also Read : மரங்களை அதிகம் நடுவோம்... மர துண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தில் இருந்த வாசகம் வைரல்

    5.உங்களைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்:

    எல்லா தருணங்களிலும் தாய்ப்பால் கொடுப்பது திட்டமிட்டபடி நடக்காது, சில சமயங்களில் உடல் மற்றும் மன நலம் காரணமாக ஏமாற்றங்களும் ஏற்படலாம். அப்படிப்பட்ட தருணங்களில் வெளியே செல்வது, நீண்ட நேரம் பாத்டப்பில் குளியல் போடுவது, நண்பர்களைச் சந்திப்பது போன்ற விஷயங்களைச் செய்யலாம். குறிப்பாக உங்களுக்கான நேரத்தைச் செலவிடத் திட்டமிடும் போது குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களின் உதவியைப் பெறுவது சிறப்பாக இருக்கும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Baby Care, Breastfeeding, Mother Care, New born baby, World breastfeeding week

    அடுத்த செய்தி