Home /News /lifestyle /

காபி குடிப்பதால் உங்கள் சருமத்திற்குக் கிடைக்கக் கூடிய 5 நன்மைகள் இதோ!

காபி குடிப்பதால் உங்கள் சருமத்திற்குக் கிடைக்கக் கூடிய 5 நன்மைகள் இதோ!

காட்சி படம்

காட்சி படம்

காபியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை இலகுவாகவும் பிரகாசமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காலையில் எழுந்ததும் காபியுடன் அந்த நாளை தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். சூடாக 1 கப் காபி குடிப்பது என்பது உண்மையில் உங்களின் காலை நேரத்தைச் சிறப்பானதாக மாற்றக் கூடும். இது உங்கள் நாளை மட்டுமில்லாமல் உங்களின் சருமத்தையும் பொலிவாக மாற்றும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இது உங்களின் கருவளையங்கள் முதல் முகப்பரு வரை அனைத்திற்கும் சிறந்த தீர்வை தருகிறதாம். காபியினால் உங்கள் சருமத்திற்குக் கிடைக்கக் கூடிய 5 நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    கருவளையங்கள் மறையும்: 

    காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தான் உங்கள் சருமத்தை நாள் முழுவதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை அகற்றுவதற்கும் காபி உதவுகிறது. மேலும் இது கண் வீக்கத்தைக் குறைக்கவும் செய்கிறது. காபியில் உள்ள காஃபின் என்கிற மூலப்பொருள் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. காபியில் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்கள் உள்ளன, எனவே அவை கண்களுக்குக் கீழே உள்ள நிறமாற்றத்தைக் குறைக்க வழி செய்கிறது.

    வயதாகாமல் தடுக்கிறது:

    சருமத்தில் நேரடியாகக் காபி ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவதால், மெல்லிய சுருக்கங்கள், தோல் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும். காபியில் உள்ள ஆன்டி- ஆக்சிடெண்ட்ஸ் தோலை மென்மையாக வைக்கச் செய்கிறது. மேலும் முன்கூட்டியே தோல் வயதாகும் தன்மையையும் இது குறைக்க வழிசெய்கிறது.

    முகம் பொலிவு பெற உதவுகிறது:

    காபியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை இலகுவாகவும் பிரகாசமாகவும் மாற்றலாம். காபியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே இது சுருக்கங்கள் மற்றும் தோய்ந்த சருமத்தைத் தடுக்கிறது. காபியில் உள்ள கஃபின் உங்கள் சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது. மேலும் திசுக்களை மீளுருவாக்கம் செய்து, செல் மறு-வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் காபி ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது. இதன் விளைவாக உங்கள் தோல் நெகிழ்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் இருக்கச் செய்கிறது.

    Also Read : தாம்பத்திய உறவுக்கு பின் கரு உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..? எப்போது அறிகுறிகள் ஆரம்பமாகும்..?

    செல்லுலைட் குறையும்:

    காபி சருமத்தின் நிலையை மேம்படுத்த உதவுகிறது. காபியில் உள்ள காஃபின் தோலின் கீழ் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் செல்லுலைட்டைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. செல்லுலைட் என்பது சருமத்தின் மேற்பரப்பில் கொழுப்பைச் சேர்க்கிறது. எனவே காபி சருமத்தை இறுக்கமாக்குகிறது மற்றும் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் செல்லுலைட்டின் தோற்றத்தை குறைக்கிறது.

    முகப்பருக்களுக்குக் காபி:

    காபியில் சிஜிஏ-க்கள் அதிகமாக இருப்பதால், அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. தினசரி காபியைக் குடித்து வருவதால் பாக்டீரியாவால் உருவாகும் முகப்பருக்களுக்கு எதிராக இது செயல்பட்டு அவற்றைத் தடுக்கிறது. மேலும் தோல் நோய்களின் ஏற்படும் தொற்றுநோயைத் தடுக்கவும் இது வழி செய்கிறது.

    எனவே காபி பிரியர்களுக்குச் சருமம் ஆரோக்கியமாக இருக்க இது தான் முக்கிய காரணமாக உள்ளது. தினசரி 1 கப் காபி குடிப்பதால் மேற்சொன்ன பலன்கள் கிடைக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Black coffee, Coffee, Skin Care

    அடுத்த செய்தி