ஆண்களே நீங்கள் ஹேண்ட்சமாக இருக்க ஆசையா? இதோ 5 சூப்பரான டிப்ஸ்!

கோப்புப் படம்

முக்கிய விஷேச நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது கூட, அவசர அவசரமாக தங்களை அழகுபடுத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான ஆண்கள் தங்களின் சிகை அலங்காரத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. முக்கிய விஷேச நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது கூட, அவசர அவசரமாக தங்களை அழகுபடுத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பொதுவெளியில் தங்களை மிகவும் அழகாக வைத்துக்கொள்ளும் ஆண்களை மட்டுமே பெண்களுக்கு பிடிக்கும் என்பதால், பதின் பருவ இளைஞர்கள் சரும ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களை நீங்கள் எப்போதும் அழகாக வைத்திருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண முயற்சி செய்யுங்கள்.

குளித்தபின்பு ஷேவிங்

காலையில் பெரும்பாலான பிரஷ் மற்றும் ஷேவிங் செய்துவிட்டு குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால், குளித்தபிறகு ஷேவிங் செய்வது உங்கள் முகத்துக்கு நல்ல பொலிவைத் தரும். ஏனென்றால், குளிக்கும் முன்பு ஷேவிங் செய்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மிகவும் கடினமாக இருக்கும். அவற்றை ஷேவிங் செய்யும்போது வலி ஏற்படும். குளித்தபிறகு ஷேவ் செய்யும்போது முடிகள் அடர்த்தி அல்லது அதன் கடினத்தன்மை இலகுவாக இருக்கும். ஷேவ் செய்வதற்கும் எளிமையாக இருக்கும். முகமும் பொலிவாக இருக்கும்.

தலைமுடியை இலகுவாக வைத்திருத்தல்

தலைமுடி ஆரோக்கியம் குறித்து ஆண்கள் பொதுவாக கண்டுகொள்வது மிக குறைவாக உள்ளது. எப்போது எண்ணெய் தேய்க்க வேண்டும்? எப்போது வறட்சியாக வைத்திருக்க வேண்டும்? என தெரிவதில்லை. இதனால் முடி ஆரோக்கியம் கெடுவதுமட்டுமின்றி, தேக ஆரோக்கியம் பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உங்களை நீங்கள் அழகாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தால் தலைமுடி அழகையும் பராமரிக்க வேண்டியது அவசியம். பலருக்கும் கடினமாக இருக்கும். பணிச்சூழல் காரணமாக வெளியே செல்ல வேண்டி இருத்தல் அல்லது டேட்டிங்கிற்காக அவசரமாக செல்ல வேண்டியிருக்கும். அப்போது காற்றில் இருக்கும் மாசு காரணமாக முடியானது கரடுமுரடாக, கடினமாக இருக்கும். தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடிய நல்ல ஹேண்ட் கிரீம் ஒன்றை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். வெளியில் செல்லும்போது உங்கள் தலைமுடிக்கு அப்ளை செய்யுங்கள். முடி ஆரோக்கியமும் மேம்படும், உங்களுக்கும் சூப்பரான லுக்கை கொடுக்கும்.

வாசனை திரவியத்தை பயன்படுத்துதல்

நீங்கள் அன்றாடம் ஜிம் செல்லும் பழக்கத்தை வைத்திருப்பவர்கள் என்றால், உங்கள் ஜிம் பேக்கில் துர்நாற்றம் வீசக்கூடும். காரணம், கடுமையாக உடற்பயிற்சி செய்யும் நீங்கள், அந்த துணிகளை அந்த பேக்கில் வைத்திருப்பீர்கள். வியர்வை படிந்த துணியை பேக்கில் மூடி வைத்திருக்கும்போது அதில் துர்நாற்றம் வீசும். திடீரென ஒருசில இடங்களுக்கு அந்த பேக்கை எடுத்துச் செல்ல நேரிடும்போது, அங்கு அசௌகரியமான சூழலை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எப்போதும் நம்மை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதால், அந்த பேக்கில் வாசனை திரவியத்தை வைத்திருக்கலாம். அது உங்கள் பேக்கில் இருக்கும் துர்நாற்றத்தைபோக்கி, நல்ல வாசனை இருக்க உதவி செய்யும். உங்களுக்கும் அசௌகரியமான சூழல் ஏற்படாது.

Also read... Happy Holi 2021: கலாச்சாரத்திற்கு ஏற்ப நாடு முழுவதும் பலவிதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை!

கீழ் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல்

கோடைகாலம் என்பதால் கீழ் பகுதியில் அதிகப்படியான முடி இருந்தால் அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காற்றின்போக்கு மிக குறைவாக இருக்கும் அந்த இடத்தில் முடி அதிகமாக இருக்கும்போது அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் உபாதை மட்டுமின்றி, பொது இடங்களுக்கு செல்லும்போது இயல்பாக உங்களால் இருக்க முடியாது. அதனால் அந்த இடத்தில் இருக்கும் முடி இல்லாமல் ஷேவ் செய்துவிட வேண்டும். மேலும், எப்போதும் இருக்கும் ஷேவ் கிரீம்களை பயன்படுத்தாமல், பிரத்யேகமாக இருக்கும் ஹேர் கண்டிஷ்னரை பயன்படுத்துங்கள்.

உதடுகளை சுத்தப்படுத்தல்

ஆண்களின் உதடுகளை சுத்தம் செய்வதற்கு நாள்தோறும் பயன்படுத்தும் டூத்பிரஷ்ஷை உபயோகிக்கலாம். உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை சுத்தம் செய்வதன் மூலம் அழகான உதடுகள் கிடைக்கும். நாள்தோறும் பல் துலக்கும்போது உதடுகளையும் லேசாக ஸ்கிரப் செய்யுங்கள். விரைவில் உங்கள் உதடு அழகானதாக மாறும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: