முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சளியினால் அவதிப்படறீங்களா? அப்ப, இந்த 5-ம் வேண்டாம்!

சளியினால் அவதிப்படறீங்களா? அப்ப, இந்த 5-ம் வேண்டாம்!

5 food items to avoid when you have cold

5 food items to avoid when you have cold

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து  வருகிறது. குளிர் காலத்தில் சிறியவர் முதல் பெரிவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சளித் தொல்லையால் அவதிப்படுவது உண்டு.

சளியினால் அவதிப்படும்போது 5 உணவுப்பொருள்களை தவிர்த்து விடுவது நல்லது. அவை குறித்து விரிவாகக் காண்போம்.

ரம்/விஸ்கி

சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தோன்றும்போது ரம், விஸ்கி போன்ற மது வகைகளை குடித்தால் சளியும், காய்ச்சலும் கட்டுக்குள் வந்துவிடும் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால், இது தவறான நம்பிக்கையாகும்.

உண்மையில், மதுபானங்களை குடிக்கும்போது உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். அதிக அளவு  மதுபானங்களை அருந்துவோர் நிமோனியா, டிபி நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படக்கூடும்.

மிட்டாய்

அதிக அளவு சர்க்கரை நிறைந்த மிட்டாய்களை உண்ணும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சர்க்கரையானது ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை பலவீனப்படுத்தும். இந்த வகை அணுக்களே உடலுக்கு நோய் தடுப்பு ஆற்றலை வழங்கக் கூடியவை.

பால் பொருள்கள்

பால், தயிர், பாலாடைக் கட்டி போன்ற பால் பொருள்கள் சளி உற்பத்தியை அதிகரிக்கக் கூடியவை. எனவே, சளியால் அவதிப்படும்போது இவற்றை தவிர்ப்பது நல்லது.

சில பழங்கள்

சளியால் அவதிப்படும்போது பப்பாளி, வாழைப்பழம், ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. உடலில் ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருள் உற்பத்தியை தூண்டிவிடும் தன்மையுள்ள இப்பழங்கள், சிலருடைய நாசியின் பாதையை வீங்கச் செய்துவிடும். இதனால் சளியின் பாதிப்பு அதிகரிக்கும்.

வேர்க்கடலை

சளியால் அவதிப்படும்போது வேர்க்கடலை சாப்பிட்டால் சிலருக்கு மூக்கடைப்பு ஏற்படக்கூடும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

First published:

Tags: Cold, Flue, Food items, Fruits, Vegetables