Home /News /lifestyle /

உங்கள் வாழ்க்கையை மோசமானதாக மாற்றும் 5 பழக்க வழக்கங்கள்..

உங்கள் வாழ்க்கையை மோசமானதாக மாற்றும் 5 பழக்க வழக்கங்கள்..

மோசமான பழக்கங்கள்

மோசமான பழக்கங்கள்

நமது பொன்னான நேரத்தை சமீப காலமாக அதிக அளவில் வீணடிக்கிறோம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மற்ற பிறப்புகளை விடவும் மனித பிறப்பு என்பது மிக பொக்கிஷமானது என்றே சொல்லலாம். நமது வாழ்க்கை முறை முதல் தினசரி செயல்பாடுகள் வரை எல்லாமே மற்ற உயிரினங்களை விடவும் மாறுபட்டுள்ளது . இதற்கு காரணம் நாம் 6 அறிவு கொண்டவர்கள். இப்படிப்பட்ட படைப்பை நாம் தினமும் வீணடித்து வருகிறோம். குறிப்பாக நமது பொன்னான நேரத்தை சமீப காலமாக அதிக அளவில் வீணடிக்கிறோம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. உங்களது நேரத்தை வீணாக்கும் 5 விஷயங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தள்ளிப்போடும் பழக்கம் :

நம்மில் பலருக்கு இருக்கும் மோசமான பழக்கம் எல்லா வேலைகளையும் தள்ளிப்போட்டு செய்வது தான். ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், கட்டாயம் அதை அப்போதே செய்து முடித்து விடுங்கள். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் பழக்கத்தை முதலில் மாற்றி கொள்ள வேண்டும். இப்படி தள்ளிப்போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அது உங்கள் வாழ்க்கையை மோசமானதாக மாற்றி விடும்.

சமூக ஊடகங்கள் :

இன்று பல கோடி மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் மிக முக்கிய தளம் என்றால் அது சமூக ஊடகங்கள் தான். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஒரு பத்து நிமிடம் தான் சாட் செய்வேன் என்று நினைத்து உள்ளே போய்விட்டு மணி கணக்கில் வெளி வராமல் இருப்பவர்கள் பலர். உங்கள் வாழ்வில் அதிக நேரம் சமூக ஊடகங்களுக்கு பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கையை நீங்களே கெடுத்து கொள்வதற்கு சமம்.



மற்றவர்களின் வேலைகள் :

பிறருக்கு உதவி செய்வது நல்ல பழக்கம் தான். ஆனால் நம்மில் பலர் நமது வேலைகளை சரிவர செய்து முடிக்காமல், பிறரின் வேலைகளை செய்து வருவோம். சில தவிர்க்க முடியாத அவசர காலங்களில் இப்படி செய்வதில் தவறில்லை. ஆனால் உங்களின் வேலைகளை செய்யாமல் உங்கள் நண்பரது வேலைகளையோ அல்லது பிறரின் வேலைகளை செய்வது உங்கள் நேரத்தை வீணடிப்பது போன்றது.

கணவன் மனைவி இருவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...

சரிவர வைத்தல் :

ஒரு வேலையை செய்ய தொடங்கும் போது எப்படி ஒழுங்கு முறையுடன் தொடங்குகிறமோ, அதே போன்று அதை முடித்த பிறகும் ஒழுங்கு முறையுடன் எல்லாவற்றையும் சரி செய்து வைக்க வேண்டும். இல்லையேல் அடுத்த முறை நாம் அதை செய்ய போகும்போது அதை செய்து முடிக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே எடுத்த பொருட்களை அந்தந்த இடங்களில் ஒழுங்குப்படுத்தி வைப்பது நல்லது.



மோசமான மனிதர்கள் :

நாம் பழகும் சிலர் மோசமானவர்கள் என்று உணர்ந்த பிறகு அவர்களுடன் பழகுவது உங்கள் நேரத்தை வீணாக செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவரின் செயல்பாடு உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது போன்று தோன்றினால் உடனே அவரை விட்டு விலகுவது நல்லது.

மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால், உங்களின் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Habits, Lifestyle change

அடுத்த செய்தி