Home /News /lifestyle /

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் 5 அற்புத பானங்கள்.. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் அருமருந்துகள்

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் 5 அற்புத பானங்கள்.. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் அருமருந்துகள்

5 அற்புதமான நச்சு நீக்கம் பானங்கள்

5 அற்புதமான நச்சு நீக்கம் பானங்கள்

Diabetes : சக்கரை நோயளிகளுக்கு உதவும் இயற்கையான 5 அற்புதமான நச்சு நீக்கம் பானங்கள்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார கவலைகளில் ஒன்றாக இருக்கிறது நீரிழிவு நோய். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 6% பேரைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட வாழ்க்கை முறை நோயாக இருக்கிறது நீரிழிவு நோய்.

    உடலின் ரத்த குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு ஆரோக்கிய நிலையே நீரிழிவு நோய். 20 - 70 வயதுக்குட்பட்டவர்களில் இந்தியாவில் சுமார் 8.7% நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 98 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

    நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்து அவசியம் என்றாலும், ஆரோக்கியத்தைப் பேண இயற்கையாகவே ஒருவர் சிறந்த டயட்டை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க சில ஆரோக்கியமான நச்சு நீக்கம் பானங்கள் உள்ளன. நம் வீட்டில் மற்றும் கிச்சனில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டே இந்த டிடாக்ஸ் பானங்களை நீங்கள் தயாரிக்கலாம்.

    உயர் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் 5 சத்தான நச்சு நீக்கம் பானங்கள் பட்டியல்:

    துளசி தண்ணீர்: துளசியில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே துளசி உடலில் சரியான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.நீரிழிவு இருக்கும் ஒருவர் 6-8 துளசி இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்தி அதைக் கொதிக்க வைத்து முடிந்தவரைச் சூடாகக் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

    இஞ்சி தண்ணீர்: பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இஞ்சியில், இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் துத்தநாகம் உள்ளது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் நிரம்பியுள்ளது. எனவே, இஞ்சி வேர்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    வெந்தய தண்ணீர்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் சேர்ப்பதற்கு வெந்தய தண்ணீர் சிறந்த டிடாக்ஸ் பானமாக இருக்கிறது. இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க வெந்தயம் உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவு முழுவதும் தேவையான அளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் குடிக்கும் முன் கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.

    இலவங்கப்பட்டை தண்ணீர்: நம் வீட்டு கிச்சனில் தவறாமல் இருக்கும் பொருள் இலவங்கப்பட்டை. டால்சினி என்றும் அழைக்கப்படும் இலவங்கப்பட்டை ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான மூலிகையாகும். உடலில் குளுக்கோஸ் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் இன்சுலினை வெளியிட கணையத்திற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடரை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் குடிக்கவும்.

    வேப்பிலை தண்ணீர்: பலர் வேப்பிலையின் அருமை தெரியாமல் அதைத் தவிர்க்கவே செய்கிறார்கள். ஆனால் இது ஆரோக்கியத்திற்குப் பல அதிசயங்களைச் செய்யக்கூடியது. குறிப்பாகச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேப்பிலை ஒரு வரப்பிரசாதம். வேப்பிலைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் 8-10 வேப்ப இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் வடிகட்டி பருகவும். இந்த பானத்தின் சுவை கசப்பாக இருந்தாலும் பலன் இனிமையானது.
    Published by:Janvi
    First published:

    Tags: Diabetics, Hydrating drinks, Sugar Detox

    அடுத்த செய்தி