ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..!

ஆக்ஸ்போர்டு போன்ற மதிப்பு மிக்க ஊடகங்களே இவ்வாறு செய்வது வருத்தை அளிக்கிறது.

news18
Updated: September 18, 2019, 4:54 PM IST
ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..!
பெண்
news18
Updated: September 18, 2019, 4:54 PM IST
ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தைக்கு தரக் குறைவான அர்த்தம் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை மாற்றக் கோரி 30,000 பேர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மரியா பீட்ரைஸ் ஜியோவானார்டி என்ற பெண் தான் மனுவை எழுதியுள்ளார். அதில் பெண்(woman) என்ற வார்த்தையின் அர்த்தத்திற்கு பலவீனமானவள், வேசி என பெண்களை இழிவுபடுத்தும் விதமான வார்த்தைகளை ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதியில் பயன்படுத்தியுள்ளனர். இந்த வார்த்தைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சாதாரணமாக கூகுளில் மொழிப் பெயர்ப்பிலேயே ’உமன்’ என்ற வார்த்தையை அடித்தாலே அதற்கான விளக்க வாக்கியத்தில் மகளிரை வெறித்தனத்தோடும், அடிமைத் தனத்தோடும் ஒப்பிட்டுள்ளனர். இப்படி பெண்களை அர்த்தப்படுத்துவது பாலியல் பொருளாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் அதில் சில வாக்கியங்கள் பெண்களை அடி பணிந்தவர்கள் என்றும் குறிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அதோடு ஆண் என்ற வார்த்தைக்கு 25 வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் என்ற வார்த்தைக்கு வெறும் ஐந்து வார்த்தைகளே தந்துள்ளனர். அதேபோல் ஆணுக்கான வரையறையிலும் இழிவான வார்த்தைகள் இருக்கின்றனவா என்று சோதித்ததில் அப்படி எதுவும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரட்டை நிலை அர்த்தம் பெண்களுக்கு மட்டும் ஏன் என்பதாலேயே ஜியோவானார்டி கடந்த ஜூலை மாதம் முதலே இந்த மனுவை எழுதி கையெழுத்து வாங்கத் தொடங்கியுள்ளார்.

Loading...

இப்படி ஆக்ஸ்போர்டு போன்ற மதிப்பு மிக்க ஊடகங்களே இவ்வாறு செய்வது வருத்தை அளிக்கிறது. அதுவும் அந்த வார்த்தைகள் நம் மொழியின் ஊடே உலகம் முழுவதும் பரவி தவறான விளைவுகளை உண்டாக்குகின்றன. குறிப்பாக தேடு பொறிகளான கூகுள், பிங் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்களும் ஆக்ஸ்போர்டு அகராதியையே உரிமம் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே
இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என மனுவில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு தரப்பிலிருந்து “ அந்த மனுவில் கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களை தீவிரமாக எண்ணுகிறோம். அதேபோல் எங்கள் அகராதியும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை நேரடியாகத் தராமல் விளக்கத்தோடு தரும். எனவே அதன் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என கூறியுள்ளனர்.

பார்க்க :

தாய்ப்பால் கொடுக்கும் முறைகளும் முக்கியத்துவமும்! குழந்தை நல மருத்துவரின் விளக்கம்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...