International Women’s Day 2021: பெண்களே...துவண்டு போகும்போதெல்லாம் சாதித்த பெண்களின் இந்த பொன்மொழிகளை நினைவில் கொள்ளுங்கள்..!

International Women’s Day 2021: பெண்களே...துவண்டு போகும்போதெல்லாம் சாதித்த பெண்களின் இந்த பொன்மொழிகளை நினைவில் கொள்ளுங்கள்..!

சர்வதேச மகளிர் தினம்

இவ்வுலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய திறமைகளின் குவியலே பெண்கள்.

  • Share this:
இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களை மகளிர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகள், கருத்துக்கள், வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் மகளிர் தினத்தில் பெண்களை கவுரவப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்வி, சிவில் உரிமைகள், அறிவியல், கலை, விண்வெளித்துறை, அரசியல் என பல துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்த காலங்கள் மாறி, காலப்போக்கில் ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பல வலிமையான பெண்கள் வெளிப்பட்டு வரலாற்றில் ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். இதனால்தான் இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடுவது மிகவும் முக்கியமானது. 

புகழ்பெற்ற பெண்களின் சில சக்திவாய்ந்த பொன்மொழிகளை இங்கு காண்போம்...

* இவ்வுலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய திறமைகளின் குவியலே பெண்கள்.

* ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் ஆயிரம் பதில் சொல்லும் ஆண்கள் அவள் எதிர் பார்க்கும் ஒன்றானா ‘சுதந்திரத்தை’ ஏனோ சொல்ல தவறுகிறார்கள்.

International Women’s Day 2021: சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8-இல் கொண்டாடப்படுகிறது? இதற்கு யார் காரணம் தெரியுமா.?

* நம்மில் பாதி பேர் பிற்போக்கு நிலையில் இருக்கும் போது நாம் அனைவரும் வெற்றிபெற முடியாது - மலாலா யூசுப்சாய்

* கனவுகளில் வெற்றிக்கான பாதை உள்ளது - கல்பனா சாவ்லா

* என்னை வரையறுக்கும் அகராதியின் ஒரே ஆசிரியர் நான் - ஜாடி ஸ்மித்

* உலகம் துன்பங்களால் நிறைந்திருந்தாலும், அதை வெல்வதில் நம் திறமை நிறைந்துள்ளது - ஹெலன் கெல்லர்* மாற்றத்திற்கு தைரியம் தேவை - அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்.

* நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று எனக்கு தெரியவில்லை,
ஆனால் நான் எப்படி இருக்க வேண்டும் என நான் அறிந்திருக்கிறேன் - டயான் வான் ஃபர்ஸ்டன்பெர்க்

* நான் வெல்லும் வரை, எனது பாவாடை ஆறு அங்குல நீளமா அல்லது ஆறு அடி நீளமா என்பதை பற்றி மக்கள் கவலைப்படக்கூடாது - சானியா மிர்சா

* மல்டி டாஸ்க் செய்த முதல் பெண் நான் அல்ல. வேலை செய்து கொண்டே குழந்தை பெற்ற முதல் பெண் நான் அல்ல. இதற்கு முன்பு இதைச் செய்த பெண்கள் பலர் உள்ளனர் - ஜசிந்தா ஆர்டெர்ன்

* பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவது அல்ல. பெண்கள் ஏற்கனவே பலமாக உள்ளனர். அந்த வலிமையை உலகம் உணரும் விதத்தை மாற்றுவதை பற்றியது தான் பெண்ணியம் - ஜி.டி. ஆண்டர்சன்

* தன்னை மீண்டும் கட்டியெழுப்பிய உடைந்த பெண்ணை விட வலிமையானது வேறு எதுவுமில்லை - ஹன்னா காட்ஸ்பி

* நான் ஒரு பெண்ணாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் - மாயா ஏஞ்சலோ

* அரசியலில், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால், ஒரு ஆணிடம் கேளுங்கள். நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால், ஒரு பெண்ணிடம் கேளுங்கள் - மார்கரெட் தாட்சர்.

 
Published by:Sivaranjani E
First published: