இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகின்றனர் : மத்திய அமைச்சர் தகவல்

மது மற்றும் போதைக்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளிக்க 135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இதற்காக 33 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 5, 2019, 9:01 PM IST
இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகின்றனர் : மத்திய அமைச்சர் தகவல்
மது
Web Desk | news18
Updated: July 5, 2019, 9:01 PM IST
மது உடலுக்குக் கேடு என்று விழிப்புணர்வுகளை தொடர்ந்து பேசி வந்தாலும், மதுவின் தாக்கம் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அதற்கு உதாரணம்தான் நேற்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையைச் ( Social Justice and Empowerment minister ) சார்ந்த அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் கூறிய தகவல்.

நேற்று மக்களவையில் , பள்ளி குழந்தைகள் போதைப் பொருளுக்கு எளிதில் அடிமையாகும் போக்கு அதிகரித்திருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஒப்புக் கொண்டு பதில் அளித்த தாவர், இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறியதோடு சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.


அதில் 16 கோடி மக்கள் மது குடிப்பதாகவும், 3.1 கோடி மக்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும் தாங்கள் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி போதைப் பொருட்களை விற்கும் அல்லது பரப்பும் நபருக்கு ஆறு முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.Loading...

அரசாங்கம் இதற்காக ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் 135 மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில நடவடிக்கைகளும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

”NAPDDR ( National Action Plan for Drug Demand Reduction ) என்ற இந்த திட்டத்தின் மூலமாக அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 127 மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை 2018 - 2025 என்ற இலக்கிற்குள் சரி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையத்திற்கு 135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு இதற்காக 33 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...