கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த B.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்( வயது 23) குமுதேப்பள்ளியை சேர்ந்த முருகேசன்( வயது 26) ஆகியோர் பல வருடங்களாக நண்பர்களாய் பழகி வந்துள்ளனர். சந்தோஷ், அடிக்கடி முருகேசன் வீட்டிற்கு சென்றுவந்ததால் முருகேசனின் தங்கை மீனா உடன் காதல் மலர்ந்துள்ளது. இது அண்ணன் முருகேசனுக்கு தெரியவந்ததால், இருவரும் எதிரிகளாக மாறி உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்,
அண்மையில் முருகேசன் வீட்டார் நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.காதல் திருமணம் செய்ததற்கே கோபமாக இருந்த முருகேசன், சொத்தை கேட்டதற்கு ஆக்ரோஷமாக காணப்பட்டுள்ளார்.முருகசேன், தங்கை வீட்டிற்கு சென்று உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என சந்தோசை மிரட்டி, அவ்வப்போது போன் மூலமாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தநிலையில், நேற்று தியாகரசனப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய சந்தோசை முருகேசன் மற்றும் அவர்களது நண்பர்களான குமார்(24), 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட மூவரும் தியாகரசனப்பள்ளி கிராம மாந்தோப்பிற்கு அருகே வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர். இதில் தப்பியோடிய சந்தோஷை, மாந்தோப்பில் வைத்து மூவரும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு, தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.