முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / முதல்வர் வருகைக்காக பேனர் கட்டும்போது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பா? - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

முதல்வர் வருகைக்காக பேனர் கட்டும்போது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பா? - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

உயிரிழந்த இளைஞர்

உயிரிழந்த இளைஞர்

Crime News : கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. அவருக்கு வயது 24. இவர் நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் டிஜிட்டல் பேனர் கட்டும் பணிக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பாலாஜி அவரது வீட்டின் அருகில் மூச்சுப் பேச்சின்றி மயங்கி கிடப்பதாக அவரது நண்பர்கள் பாலாஜியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பாலாஜியின் தாய் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, பாலாஜியை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமைச்சர் வருகையையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ராட்சத டிஜிட்டல் பேனர் அமைக்கும்போது மேலே சென்ற மின்சாரம் கம்பி மீது டிஜிட்டல் பேனர் பட்டு அதன் மூலம் பாலாஜி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும், அதனை மறைத்து பாலாஜியை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்த சிலர் வீட்டு அருகே போட்டு விட்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் பாலாஜி மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலாஜி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக டிஜிட்டல் பேனர் கட்டும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : குமரேசன் - கிருஷ்ணகிரி

First published:

Tags: CM MK Stalin, Crime News, DMK, Krishnagiri, Local News