ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஓசூர் அருகே கல்குவாரி பிரச்சனையில் ஊரை காலி செய்த கிராம மக்கள்... அதிகாரிகள் சமரசம்

ஓசூர் அருகே கல்குவாரி பிரச்சனையில் ஊரை காலி செய்த கிராம மக்கள்... அதிகாரிகள் சமரசம்

ஊரை காலி செய்து செல்லும் கிராம மக்கள்

ஊரை காலி செய்து செல்லும் கிராம மக்கள்

Hosur | கிராம மக்கள் இதுவரை தங்கள் கிராமமான கொரட்டகிரியில் இருந்து 6 கிலோ மீட்டர் வரை நடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  ஓசூர் அருகே கல்குவாரி பிரச்சனையில் ஊரை காலி செய்து சென்ற கிராம மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து மீண்டும் திரும்ப செய்தனர்.

  ஓசூர் அருகே கொரட்டகிரி கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரிகளால் கடும் பாதிப்படைந்த கிராம மக்கள் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், தூசுவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து வருவதாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  இந்நிலையில், இன்று கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி குழந்தைகளுடன் ஆடு, மாடு வீட்டில் உள்ள பாத்திரங்கள் ஆகியவற்றுடன் ஊரை காலி செய்து ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.

  இதையும் படிங்க : ஆளுநருக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் திமுக.. கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முடிவு

  இதையடுத்து, அவர்களை பாதி வழியில் தடுத்து நிறுத்திய வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு ஒசூரை நோக்கி பயணித்தனர்.

  மழை குறுக்கிட்டதால் முதுகானப்பள்ளியில் தஞ்சமடைந்திருந்தனர். இதையடுத்து, அவர்களிடம் ஒசூர் ஏ.எஸ்.பி. அர்விந்த் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் கிராமத்திற்கே அழைத்து சென்றனர். கிராம மக்கள் இதுவரை தங்கள் கிராமமான கொரட்டகிரியில் இருந்து 6 கிலோ மீட்டர் வரை நடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் : செல்வா - ஓசூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Hosur, Krishnagiri