ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பத் திருவிழா.. பூங்கரகத்தில் கங்கம்மா தேவி உலா!

ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பத் திருவிழா.. பூங்கரகத்தில் கங்கம்மா தேவி உலா!

ஓசூர்

ஓசூர்

ஓசூர் அடுத்த தர்மராஜ கொத்தப்பள்ளியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கங்கம்மா தேவி தெப்பத் திருவிழா...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hosur, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தர்மராஜ கொத்தப்பள்ளியில் நடைபெற்ற கங்கம்மா தேவி தெப்ப திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

ஓசூர் அடுத்த தர்மராஜா கொத்தம்பள்ளியில் உள்ள பெரிய ஏரி 18 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையில் தற்போது பெரிய ஏரி 18 ஆண்டுகள் கழித்து நிரம்பியுள்ளது. அதை கொண்டாடும் விதமாக பெரிய ஏரி சுற்றியுள்ள கிராமங்களான தர்மராஜா கொத்தப்பள்ளி, பென்னிக்கல்,உப்பு தம்மான்றப்பள்ளி, பைரமங்கலம், சின்னட்டி மற்றும் கெலமங்கலம் உள்ளிட்ட பல கிராம மக்கள் ஒன்றிணைந்து பெரியஏரி நிரம்பியதை, மழைக்கு நன்றி சொல்லி கொண்டாடும் விதமாக கங்கம்மா தேவிக்கு பூஜை செய்தனர்.

அதில் கங்கமா தேவியை பூ கரகமாக அலங்காரம் செய்து ஊர்மக்கள் ஒன்றுக்கூடி மாவிலக்கினை சுமந்தவாரு ஊர்வலமாக கொண்டு வந்து ஏரியின் தெப்பத்தில் கங்கம்மாவை உலாவர செய்து திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

Also see... சபரிமலையில் நாளை மண்டல பூஜை... தங்க அங்கியில் ஜொலிக்க உள்ள ஐயப்பன்..

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பாக கொண்டாடப்பட்ட இவ்விழாவினை பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் அவரது கரங்களால் பூஜை செய்து ஆரம்பித்து வைத்தார். மேலும்  தர்மராஜா கொத்தப்பள்ளியின் ஊர் கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி, மஞ்சுநாத், ஆர். கிருஷ்ணமூர்த்தி, வீரப்பா, சம்பங்கி மற்றும் பிரகாஷ் தெப்பத் திருவிழா விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தனர்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்

First published:

Tags: Hindu Temple, Hosur