Home /News /krishnagiri /

தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணையில் நீர் வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணையில் நீர் வரத்து அதிகரிப்பு

Krishnagiri | பெங்களூர் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு - கே ஆர் பி அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கே ஆர் பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாதுகாப்பு கருதி உபரிநீராக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரலாறு காணாத அளவில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் இந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருவதால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை  நிலவரப்படி கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 1 966 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

    ஏற்கனவே அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீராக பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 20,000கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை கழுகு பார்வையில் பார்க்கும் பொழுது  கே.ஆர்.பி அணை கடல் போல் காட்சியளித்து, பிரமிக்க வைக்கிறது.



    Also see...புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தல்: சினிமா பாணியில் பிடித்த போலீஸ்

    இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றம் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் ஆற்றில் குளிக்கவும் புகைப்படம் எடுக்க கூடாது என்றும் கால்நடைகளை மேச்சலுக்கு விடக்கூடாது என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood alert, Heavy Rainfall, Krishnagiri, Thenpennai

    அடுத்த செய்தி