முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / அரிவாள்மனையால் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. தலைமறைவான கணவன் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

அரிவாள்மனையால் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. தலைமறைவான கணவன் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Krishnagiri : கிருஷ்ணகிரியில் தனது இரண்டாவது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி  கலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி பிரச்சினை காரணமாக கலா கடந்த 5 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

இதனையடுத்து, சுந்தர் இரண்டாவதாக பழையபேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த இரண்டு குழந்தைகளும் வாணியம்பாடியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது மனைவிக்கும் சுந்தருக்கும் இடையா குடும்ப தகராறு நிலவி வந்ததால், லட்சுமி கடந்த சில மாதங்களாக பழையபேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே சுந்தரின் தாயார் சுந்தருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி லட்சுமியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், மறுநாள் காலை சுந்தரின் தாயார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, லட்சுமி அரிவாளமனையால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்து, கை மற்றும் தாடை பகுதிகளில் காயம் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக கிருஷ்ணகிரி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Must Read : முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுந்தரை காணவில்லை  என்பதால் அவரே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் - ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி. 

First published:

Tags: Crime News, Krishnagiri, Murder