முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / விலகாத பனிமூட்டம்... சந்திரனை போல காட்சியளித்த சூரியன்... வாகன ஓட்டிகள் அவதி..!

விலகாத பனிமூட்டம்... சந்திரனை போல காட்சியளித்த சூரியன்... வாகன ஓட்டிகள் அவதி..!

சந்திரனை போல காட்சியளிக்கப்பட்ட சூரியன்

சந்திரனை போல காட்சியளிக்கப்பட்ட சூரியன்

ஓசூரில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சூரியன் சந்திரனை போல காட்சியளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

பிப்ரவரி மாதம் ஆகியும் தமிழகத்தில் பல இடங்களில் குளிர் குறையாமல் பனிமூட்டமாக காணப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை கடுமையான குளிருடன் பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டத்தால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவியர்கள், நடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சூரியன் சந்திரனை போல் காட்சியளித்ததால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

ஓசூர் பகுதிகளில் குளிர்காலம் முடிவடைந்து தற்போது பகல் நேரத்தில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் அவ்வப்போது பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது. இன்று காலை ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பனி மூட்டம் இருந்ததால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

செய்தியாளர் : செல்வா (ஓசூர்)

First published:

Tags: Hosur, Moon, Sun