ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

உயிரிழந்த மாணவன் கோபிநாத்

உயிரிழந்த மாணவன் கோபிநாத்

சண்டையின்போது கோபிநாத் என்ற மாணவனை தயாநிதி என்ற மாணவன் தாக்கி கீழே தள்ளியதில் கோபிநாத் என்ற மாணவனுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இரண்டு பள்ளி மாணவர்கள் மோதி கொண்டதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கப்பல் வாடி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நேற்று மாலை 3 மணியளவில் இடைவேளையில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

  இதையும் படிக்க : கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.. வனத்துறையினர் அச்சம்!

  அப்போது தயாநிதி என்ற மாணவனுக்கும் கோபிநாத் என்ற மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டையின்போது கோபிநாத் என்ற மாணவனை தயாநிதி என்ற மாணவன் தாக்கி கீழே தள்ளியதில் கோபிநாத் என்ற மாணவனுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அருகில் இருந்த சக மாணவர்கள் இருவரையும் தடுத்து இது பற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவன் கோபிநாத்தை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் மற்றும் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் மாணவன் கோபிநாத் இறப்பு குறித்து மாணவன் தயாநிதி மற்றும் சக மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவன் இறப்பு குறித்து தகவலறிந்து வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் : குமரேசன்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Krishnagiri, School student, School students