முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / குண்டூசியை விழுங்கிய அரசு பள்ளி மாணவன்... ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!

குண்டூசியை விழுங்கிய அரசு பள்ளி மாணவன்... ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!

ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் வயிற்றுக்குள் குண்டூசி இருப்பது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஓசூரில் குண்டூசியை விழுங்கிய அரசு பள்ளி மாணவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் எல்லேஷ் (12) வாய்க்குள் குண்டு ஊசி வைத்துக் கொண்டு எதிர்பாராத விதமாக நீரை குடித்துள்ளார். அப்போது குண்டூசி வயிற்றுக்குள் சென்றது.

உடனடியாக மாணவன் உடற் கல்வி ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கவே பெற்றோர் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் குண்டூசி இருப்பது தெரியவந்தது.

மாணவனின் வயிற்றுக்குள் இருக்கும் குண்டூசி

இதனை இங்கு எடுக்க முடியாது என்று கூறிய மருத்துவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர் . அங்கு மாணவருக்கு சிகி்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் : ஓசூர்செல்வா

First published:

Tags: Hosur