ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் விஷம் அருந்தி பள்ளி மாணவி தற்கொலை - ஓசூரில் சோகம்

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் விஷம் அருந்தி பள்ளி மாணவி தற்கொலை - ஓசூரில் சோகம்

தற்கொலை - காதலுக்கு எதிர்ப்பு

தற்கொலை - காதலுக்கு எதிர்ப்பு

Hosur | ஒசூர்  அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலனுடன் விஷம் குடித்த 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Hosur, India

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக மாநிலம் கோலார் பகுதி கிராமத்தை சேர்ந்த உறவினர் பெண்ணான  9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இவரது காதல் விவகாரம் மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் இரு வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் தனது காதலியை தனது வீட்டிற்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

  இது குறித்து மாணவியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் பெயரில் கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி காதல் ஜோடி இருவரும் சூளகிரி அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

  இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதித்தனர். இந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து சூளகிரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதலன் செளந்தர்ராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  Also see... அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியும் காதலனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: செல்வா, ஓசூர்

  தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Commit suicide, Crime News, Hosur, Lovers, School student