ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ப்ளஸ் 2 மாணவி ஏரிக்கரையில் சடலமாக மீட்பு... பர்கூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

ப்ளஸ் 2 மாணவி ஏரிக்கரையில் சடலமாக மீட்பு... பர்கூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ப்ளஸ் டூ வகுப்பு மாணவி ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கொலையா அல்லது தற்கொலையா விசாரணை செய்து வருகின்றனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அஞ்சூர் ஊராட்சி மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகள் பார்கவி (17). இவர்  ஐகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ அறிவியல் பாடப்பிரிவு வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பார்கவி உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடினர்.

  அத்துடன் ஆசிரியர்களிடம் போன் செய்தும் விசாரித்து பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. மாணவி நேற்று பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஞாற்றுகிழமை பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் இடையே அன்று மாலை ஜகுந்தம் ஏரியில் பள்ளி மாணவி ஒருவர் சீருடையில் சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது.

  இதையடுத்து அங்கு சென்ற பார்கவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலமாக இருப்பது பார்கவி என உறுதி செய்தனர். பின்னர் பர்கூர் போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் பள்ளிக்குச் சென்ற மாணவி ஏரியில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மாணவி நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் பாதை வேறு. ஆனால் எப்படி ஏரி பகுதிக்கு வந்தார். அவரே வந்தாரா அல்லது வேறு நபர்கள் யாராவது அழைத்து வந்தார்களா? மாணவியின் இறப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see...  100நாள் வேலை பார்த்துக்கொண்டே குரூப் 2 தேர்வு.. பார்வை குறைபாட்டுடன் 55 வயதில் தீவிரமாய் படிக்கும் முதியவர்!

  நேற்றைய தினம் கப்பல்வாடி கிராமத்தில் இரு மாணவர்கள் பள்ளி இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து கோபிநாத் என்கிற ப்ளஸ் டூ மாணவன் உயிரிழந்த நிலையில் இன்று பிளஸ் டூ மாணவி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Dead body, School student, Thiruvallur