ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

''வன்முறைக்கு வழியில்லை என்பதால் அணிவகுப்பை தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்'' - வன்னி அரசு

''வன்முறைக்கு வழியில்லை என்பதால் அணிவகுப்பை தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்'' - வன்னி அரசு

வன்னி அரசு - ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு

வன்னி அரசு - ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு

விசிக கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் வன்னி அரசு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் மனுஸ்ருமிதி புத்தகங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Hosur, India

  ஆர்எஸ்எஸ் இயக்கம் அணிவகுப்பு என்ற பெயரில் தமிழகத்தில் சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறது என விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அச்சடிக்கப்பட்ட மனுஸ்ருமிதி புத்தகங்களை இன்று தமிழக முழுவதும் அக்கட்சியினர் பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விசிக கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் வன்னி அரசு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் மனுஸ்ருமிதி புத்தகங்களை பொதுமக்களிடம் வழங்கினார். ஓசூரில் காந்தி சிலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு புத்தகங்களை வழங்கிய அவர், புத்தகத்தில் பெண்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளதை அனைவரும் படியுங்கள் படித்தவர்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.

  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வன்னி அரசு, தமிழ்நாட்டில் பாஜக தன்னுடைய அரசியலை விரிவுபடுத்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு என்ற பெயரில் சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவோ தமிழ்நாட்டின் அடையாளத்திற்கோ எந்தவிதமான போராட்டத்தையும் ஆர்எஸ்எஸ் நடத்துவதில்லை, முழுக்க முழுக்க சமூக பதற்றம், வன்முறை கலவரம் இதனை மையப்படுத்தி ஆர்எஸ்எஸ் இன் செயல் திட்டம் இருக்கிறது. பாஜகவும் அதையேதான் செய்து வருகிறது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள் என்றார்.

  இதையும் படிக்க : பெரியாருக்கு அண்ணாமலை கடன்பட்டுள்ளார் - எம்.பி சு. வெங்கடேசன் பேச்சு

  மும்பை நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த எஸ்வந்த் சிண்டே என்பவர், இந்தியா முழுவதும் வெடிகுண்டுகள் வைக்க பயிற்சி கொடுத்தார்கள் என்று நீதிமன்றத்தில் அப்பிடவிட் தாக்கல் செய்துள்ளார். தற்போது தமிழகத்தை குறி வைத்துள்ளார்கள், அவர்களே வெடிகுண்டுகளை வைத்து சமூக பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை செய்வார்கள், இதற்கு பல ஆதாரங்கள் உள்ளது. ஆகவே கடலூர் மாவட்ட காவல்துறை இந்த பின்னணியில் அதனை விசாரணை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம், ஆர் எஸ் எஸ் அமைப்பினர் உண்மையாக நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று கொள்கிறார்கள் என்றால் அவர்கள் இன்று அணிவகுப்பை நடத்தி இருக்க வேண்டும், ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

  ஆதார் அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை நீதிமன்றம் கேட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அணிவகுப்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. இதனை ஏற்று கொள்ளாமல் அவர்கள் அணிவகுப்பை தள்ளி வைத்துள்ளார்கள் என்றால் வன்முறை நடத்துவதற்கு ஏதுவாக நீதிமன்றம் வழி காட்ட வில்லை, நான்கு சுவர்களுக்குள் நடத்த வேண்டும் என்றால் தெருவில் நடத்த முடியாது தெருவில் நடத்த முடியவில்லை என்றால் கலவரங்கள் செய்ய முடியாது வன்முறை செய்ய முடியாது அவர்களுடைய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

  இது ஆர்எஸ்எஸ் இன் சதி திட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில் இந்த நிபந்தனைகள் இருக்கின்றன உண்மையாகவே ஆர்எஸ்எஸ் சமூக சேவை இயக்கம் என்றால் ஆதார் அட்டை, அடையாள அட்டைகளை கொடுத்து விட்டு அணிவகுப்பு நடத்துங்கள் அதையெல்லாம் கொடுக்க முடியாமல் திணறுகின்ற இயக்கமாக ஆர்எஸ்எஸ் உள்ளது என்று கூறினார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: RSS, Vanniarasu, VCK