Home /News /krishnagiri /

ஒரு ரூபாய்க்கு புடவை - அலைமோதும் பெண்கள் கூட்டம்.. எங்கு தெரியுமா?

ஒரு ரூபாய்க்கு புடவை - அலைமோதும் பெண்கள் கூட்டம்.. எங்கு தெரியுமா?

அலைமோதும் பெண்களின் கூட்டம்

அலைமோதும் பெண்களின் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பெண்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடை நிறுவனம் திணறல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Krishnagiri
    கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க அதிகாலை முதலே பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் என்ற பிரபல ஜவுளி கடை, இன்று கடை திறந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை நினைவு கூறும் விதமாக கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    இதையடுத்து, இந்த கடையில் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து அதிகாலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள்,ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர்.



    கடை திறந்த பின் அலைமோதிய மக்கள் கூட்டம்,  முண்டியடித்துக் கொண்டு புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்  கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

    செய்தியாளர்: குமரேசன், கிருஷ்ணகிரி
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Krishnagiri, Offer, Textiles

    அடுத்த செய்தி