ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படங்கள் இல்லை... கூட்டாட்சியை சிதைக்கும் திமுக அரசு- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படங்கள் இல்லை... கூட்டாட்சியை சிதைக்கும் திமுக அரசு- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  தமிழகத்தில் திமுக அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று காலை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைஅமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஓசூர் வந்த அவர்  பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

  அப்போது அவர், இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் நான் பார்த்த பொழுது தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசின் பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்காமல் தமிழகத்தில் ஆளும் அரசு கூட்டாட்சி தத்துவத்தையே சிதைத்துள்ளது. தற்பொழுதைய ஆளும் திமுக அரசாங்கம் கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்குகிறது.

  எனவே தமிழக மக்கள் இந்த அரசுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் 8 ஆண்டுகளில் மக்களுக்கான நல திட்டங்களை பல மடங்கு வழங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை காட்டிலும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் துவக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்து துவக்கப்பட்டு அவைகள் அனைத்தும் தற்பொழுது மருத்துவ கல்லூரிகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதே அதற்கு சாட்சியாகும்.

  இதையும் படிங்க: எல்லா கடனையும் தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடத்துவது- கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை போல எந்த நிலையிலும் மத்திய பிஜேபி அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை.  முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் பொழுது பொது மக்களை மத்திய அமைச்சர்கள் நேரில் சந்திப்பதே அரிதாக இருந்த நிலையில் இப்பொழுது மக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு நல திட்டங்களை செய்து கொண்டே இருக்கும் என்றார்.

  செய்தியாளர்: செல்வா- ஓசூர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Hosur, Minister