கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் (வயது 56) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20.10.2021 அன்று 1-ம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை படிக்க அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக மொத்தம் 29,265 புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வந்தன.
இதில் 17, 265 புத்தகங்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மீதம் உள்ள 12,000 புத்தகங்கள் ஊத்தங்கரை வட்டார கல்விஅலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் கடந்த 4.4.2022 அன்று வட்டார கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆய்வு செய்தார்.
அதில் 12,000 புத்தகங்கள் காணாமல் போய் இருந்தது. அதன்மதிப்பு ரூ.1,80,000ஆயிரம் ஆகும். இது தொடர்பாக அதிகாரி மாதம்மாள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் பதிவேடு அறை எழுத்தளராக பணியாற்றி வரும் ஊத்தங்கரை அருகே உள்ள நாட்டான் கொட்டாயை சேர்ந்த தங்கவேல் (52), மற்றும் அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ஊத்தங்கரை காந்தி நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (37) ஆகிய 2 பேர்மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு 2 பேர் மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also see... ஆபாசமாகப் பேசிய இளைஞர்களைத் தட்டிக் கேட்டவர் கொலை.. 4 பேர் கைது
புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டு அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஆ.குமரேசன்,கிருஷ்ணகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt School, Krishnagiri, School books