Home /News /krishnagiri /

அடிபம்புடன் சேர்த்து அவசரமாக போடப்பட்ட சிமெண்ட் சாலை... கிருஷ்ணகிரியில் அடுத்த சர்ச்சை

அடிபம்புடன் சேர்த்து அவசரமாக போடப்பட்ட சிமெண்ட் சாலை... கிருஷ்ணகிரியில் அடுத்த சர்ச்சை

அடிபும்ப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை

அடிபும்ப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை

இதற்கு முன் வேலூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்று, பின் சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சையால் அதை மாநகராட்சி சரி செய்தது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அடிபம்பை அகற்றாமல் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அடிபம்பை அகற்றாமல் சாலை போடப்படும் சம்பவங்கள் சமீப காலங்கலாக ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. இதற்கு முன் வேலூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்று, பின் சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சையால் அதை மாநகராட்சி சரி செய்தது.

    தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி ஊராட்சி முல்லை நகரில். சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரையில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் சுமார் 6 லட்சம் மதிப்பில் என்.ஆர்.ஜி.எஸ் நிதியிலிருந்து புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    Also Read : அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை.. வைரலான போட்டோவால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

    இந்த சாலை சாலை ஓரமாக இருந்த கை விசை பம்பை  இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக  பயன்படுத்தி வந்ததுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் சிமெண்ட் சாலை போடும் பொழுது அதனை அகற்றாமல் அதன் மேலேயே சாலை போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பம்பை அகற்றாமல் சாலை போடப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து பம்பை சரிசெய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Krishnagiri, Road accident

    அடுத்த செய்தி