முகப்பு /செய்தி /Krishnagiri / எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு : தாய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்

எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு : தாய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்

உயிரிழந்த மாணவரின் வீடு

உயிரிழந்த மாணவரின் வீடு

Neet Exam : எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என தாய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு ஓசூரில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18) ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார்.

அதனைத்தொடர்ந்து முரளி கிருஷ்ணா நீட் போட்டி தேர்வும் எழுதியுள்ளார். ஆனால் 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் போட்டி தேர்வில் கடந்தாண்டு தோல்வியுற்றார். இதனையடுத்து மாணவர் முரளி கிருஷ்ணா இந்த ஆண்டும் நீட் போட்டி தேர்வை எழுதுவதற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பின் மூலம் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு சென்ற முரளி கிருஷ்ணா, தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதை கண்ட அவரது பெற்றோர்கள் கதவை தட்டி அவரை அழைத்துள்ளனர்.

Also see... எந்த படிப்பு என்பதை விட எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பதே முக்கியம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுரை

ஆனால் அவர் எந்த சப்தமும் கொடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது அறையினுள் முரளி கிருஷ்ணா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாணவன் எழுதிய கடிதம்

இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விசாரணையில் அப்போது மாணவன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில்,  “எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா, என்னால நீட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா, நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன், ஆனா மெடிக்கல் சீட் வாங்கற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது, நான் இந்த முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுமா, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேம்மா” என அவர் தனது தாய்க்கு கடிதம் எழுதி உள்ளார்.

மாணவர் இறப்பு குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:  செல்வா, ஓசூர்

First published:

Tags: Hosur, Krishnagiri, Neet Exam, Student Suicide