முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..

ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..

ஓசூரில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் உதவிய இஸ்லாமிய சகோதரர்கள்..

ஓசூரில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் உதவிய இஸ்லாமிய சகோதரர்கள்..

Hosur | இந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் ஊர்வலத்தை காண வந்த பொதுமக்களுக்கு ஓசூர் பகுதி முஸ்லீம் இளைஞர்கள் குளிர்பானங்களையும் குடிநீரும் வழங்கினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

ஓசூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்  நேற்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகள் அனைத்தும் ஓசூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஓசூர் பகுதியில் நேற்று வழக்கத்தை விட அதிக அளவில்  வெயில் சுட்டெரித்தது. ஊர்வலத்தில் சென்ற பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாட்டில்களை தேடி அலைந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகளும் திறக்கப்படவில்லை.

இதனிடையே ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் ஊர்வலத்தை காண வந்த பொதுமக்களுக்கு ஓசூர் பகுதி முஸ்லீம் இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.

அதனை இந்து அமைப்பினரும் மகிழ்ச்சியோடு பெற்று வாங்கி அருந்தி சென்றனர். பாதுகாப்புக்காக வந்திருந்த காவலர்களுக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.

Also see... மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

மேலும் ஜாமியா மஸ்ஜித் பள்ளி வாசல் சார்பில் விநாயகர் ஊர்வலம் சென்ற இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: செல்வா,ஓசூர்

First published:

Tags: Hosur, Krishnagiri, Muslim, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி