ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

சித்தி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் போக்சோவில் கைது..

சித்தி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் போக்சோவில் கைது..

சிறுமி (ஃபைல் படம்) கைதான கௌசிக்

சிறுமி (ஃபைல் படம்) கைதான கௌசிக்

Krishnagiri Pocso Arrest : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கஞ்சா போதையில் தனது தங்கச்சியிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் பகுதியை சேர்ந்தவருக்கு  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவால் அவரது மனைவி  இறந்து விட்டார்.  இதனையடுத்து தனது இரண்டு மகன்களை கவனித்துக்கொள்ள இரண்டாவதாக மற்றொரு பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது மனைவிநேற்று பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவரின் முதல் மனைவியின் 21 வயது மகன் தனது 5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட பர்கூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்ட அந்த இளைஞர்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சித்தி மகளான 5 வயது பெண் குழந்தையிடம் பாலீயல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் கௌசிக்கை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கஞ்சா போதையில் தங்கையிடமே அண்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : குமரேசன் (கிருஷ்ணகிரி)

First published:

Tags: Crime News, Krishnagiri, Local News