முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கஞ்சா போதையில் போலீசை மிரட்டி ரீல்ஸ் போட்ட இளைஞர் : தட்டிய தூக்கிய கிருஷ்ணகிரி காவல்துறையினர்!

கஞ்சா போதையில் போலீசை மிரட்டி ரீல்ஸ் போட்ட இளைஞர் : தட்டிய தூக்கிய கிருஷ்ணகிரி காவல்துறையினர்!

அசோக்

அசோக்

ந்த இளைஞர் மீது ஏற்கனவே 3 அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரியில் போலீசாரை மிரட்டுவதைப் போலவும், கஞ்சா அடிப்பது போலவும், சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர்க்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து அவர் அனைத்து காவல் நிலையத்துக்கும் கஞ்சா புழக்கம் சம்பந்தமாக சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், இன்று கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் நகர் பகுதியில் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக நகர காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது பழைய பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞரை நகர காவல் நிலைய பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் அசோக் எனவும் கிருஷ்ணகிரி பழையபேட்டை கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் மீது ஏற்கனவே 3 அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேற்கொண்டு அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திருந்த ரீல்சை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் கஞ்சா அடிப்பது, கஞ்சா செடியின் அருகில் இருந்து ரீல்ஸ் செய்வது, காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரீல்ஸ் செய்திருப்பதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அசோக் மீது வழக்கு பதிவு செய்த நகர போலீசார், அவரிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் பெற்றனர்.

அந்த வாக்கு மூலத்தில் இனி நான் கஞ்சா அடிக்க மாட்டேன் என்றும் அடிதடியில் ஈடுபட மாட்டேன், போலீசாரை தரக்குறைவாக பேசமாட்டேன், ஒழுக்கத்துடன் நடந்து கொள்வேன் எனவும் போலீசாரிடம் உறுதியளித்தார்.

First published:

Tags: Ganja, TikTok, Youth arrested