ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

பக்தி பரவசம்.. ஒட்டுமொத்த கிராமமும் திருப்பதி விசிட்.. வெறிச்சோடிய ஊர்!

பக்தி பரவசம்.. ஒட்டுமொத்த கிராமமும் திருப்பதி விசிட்.. வெறிச்சோடிய ஊர்!

வசந்தபுரம் கிராமம்

வசந்தபுரம் கிராமம்

கிராம பாதுகாப்பிற்காக 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri | Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே ஒட்டு மொத்த கிராமமே திருப்பதி ஏழுமலையான தரிசிக்க சென்றதால் கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ளது வசந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 45 குடியிருப்புகள் உள்ளன.

இந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 4 வருடத்திற்கு ஒரு முறை திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று இந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புறப்பட்டு சென்றுள்ளனர்.

முதியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத சிலர் மட்டுமே இந்த கிராமத்தில் இருக்கின்றனர். இதனால் இந்த கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது

இதையும் படிங்க | மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்.. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

இதனால் கிராம பாதுகாப்பிற்காக 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Krishnagiri, Local News, Tirupathi