கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழக இளைஞரை வடமாநில இளைஞர்கள் கட்டி வைத்து 2 நாட்களாக சித்திரவதை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னாறு என்ற இடத்தில் காய்கறிகளை பதப்படுத்தி வெளிநாடுக்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனத்திற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக துணை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது கான்ட்ராக்ட் பணியை முடித்துவிட்டு ஊத்தங்கரை பகுதிக்கு வந்ததாகவும், அப்போது அங்கு அவருடன் வேலை செய்த நாராயணனின் அண்ணன் மகன் பிரபாகரன் என்பர் அவரை தேடி நிறுவனத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு பிரபாகரன் இரண்டு டன் இரும்பு கம்பிகளை திருடி விட்டதாக கூறி அங்கு வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் சில பேர் கட்டி வைத்து சித்திரவதை செய்து அதை வீடியோ எடுத்து தனக்கு அனுப்பி 1.5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக நாரயணன் சூளகிரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த புகாரில் எம்.ஆர் & கோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆன ஓசூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் வட மாநில தொழிலாளர்களை வைத்து தனது அண்ணன் மகன் பிரபாகரனை கட்டி வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் தான் கேட்ட 1.5 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் பிரபாகரனை விடுவிப்பத்தாகவும் கூறி மிரட்டுகிறார் என போலீசில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை இரண்டு நாட்களாக கயிற்றில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருப்பூரில் வட மாநில இளைஞர்கள் தமிழக இளைஞர்களை தாக்குவதாக கூறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Local News