ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஊருக்குள் புகுந்த மலைபாம்பை தோளில் போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

ஊருக்குள் புகுந்த மலைபாம்பை தோளில் போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

மலைபாம்பை தோளில் போட்டு விளையாடிய இளைஞர்கள்

மலைபாம்பை தோளில் போட்டு விளையாடிய இளைஞர்கள்

Krishnagiri phython | சாலையில் ஊர்ந்து சென்ற மலைபாம்பை தோளில் போட்டு செல்பி எடுத்த இளைஞர்கள் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்து இளைஞர்கள் செல்பி எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே கீழ்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் ஒரு புதுவிதமான சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்துப் பார்த்துள்ளனர். அப்போது அங்கு மலைப் பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் சத்தம்போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு திரண்ட ஊர்  இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பாம்பை தங்களது தோள்களின் மீது போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் மலை பாம்பை மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.  மலை பாம்பு திடீரென ஊருக்குள் புகுந்த சம்பவம் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.

First published:

Tags: Krishnagiri, Local News, Snake