ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்.. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்.. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

Krishnagiri | மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மாலை அணிந்த ஐயப்பன் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri | Krishnagiri

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மாலை அணிந்த ஐயப்பன் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். 

கிருஷ்ணகிரி பழையபேட்டை மிலாது நபி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், ஹிந்து, முஸ்லிம் இடையே மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் 5ம் ஆண்டாக மிலாது நபி இஸ்லாமிய அமைப்பு சார்பில் அதன் தலைவர் முகமது அஸ்லாம்  தலைமையில் இன்று கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பஜனை மற்றும் வழிபாட்டிற்கு பூஜை பொருட்களை வழங்கினர்.

இதையும் படிங்க | கள்ளக்காதலியின் தொல்லை தாங்காமல் அடித்துக்கொன்ற வடமாநில இளைஞர் - குஜராத்தில் சிக்கிய கள்ளக்காதலன்

மேலும் மாலை அணிந்து பஜனையில் பங்கேற்ற ஐயப்பன் பக்தர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதான உணவுகளை பரிமாறினர்.

மத நல்லிணக்கத்தையும், இந்துமுஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி 

First published:

Tags: Krishnagiri, Local News, Relationship With a Muslim