கிருஷ்ணகிரி அருகே கிராமசபை கூட்டத்தில் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி கண்ணீர் மல்க மனு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த அக்ட்டோபார் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வரும் மதியழகன் என்பவர் சாலமரத்துப்பட்டி பஞ்சாயத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை எனவும் புதிய தெருவவிளக்குகள் அமைப்பதற்கு கூட அக்கறை கொள்வதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இவரை தொடர்ந்து கிராம சபா கூட்டத்தில் ஓலைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்தி என்பவரும் கலந்து கொண்டு குறைகளை கூறினார்.அப்போது தங்கள் பள்ளியில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை 95 மாணவ மாணவிகள் பயின்று வருவதாகவும், தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read: நண்பன் கூட பார்க்காம நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப்போனாரு - தங்கமணி பேச்சால் பரபரப்பு
மேலும் இது குறித்து பலமுறை பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என புகார் தெரிவித்தார். இது போன்று எந்த ஒரு வித அடிப்படை வசதியும் இல்லாத பள்ளியில் ஆசிரியாக பணி செய்வது அரசு பள்ளி ஆசிரியரின் சாபக்கேடு என்றும் இதற்கு பதிலாக விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று விடலாம் எனவும் கண்ணீர் மல்க பேசினார்.
அரசுபள்ளி ஆசிரியை அரசுக்கு எதிராக பேசியும் இந்த அரசாங்கத்தில் வேலை செய்வதே சாபக்கேடு என்றும் கண்ணீருடன் தனது மனுவை கிராம சபை கூட்ட தலைவரிடம் கொடுத்தார். இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Teacher, Viral Video