முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழந்த வழக்கு: 20 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழந்த வழக்கு: 20 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை

வழக்கில் இருந்து விடுதலையான திமுக முன்னாள் அமைச்சர்

வழக்கில் இருந்து விடுதலையான திமுக முன்னாள் அமைச்சர்

Krishnagiri Dmk Fire Crackers Accident | கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பு வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முல்லைவேந்தனுடன் முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் உட்பட 9 பேரை கிருஷ்ணகிரி நீதிமன்றம் விடுதலை செய்தது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போதைய தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுகவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், அப்போதைய மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், தலைமை செயற்குழு உறுப்பினர் நவாப் உட்பட ஏராளமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் தஸ்தகீர் என்கிற இளைஞர் படுகாயம் அடைந்த உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதவி செய்யப்பட்டு அப்போதைய முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்,மாவட்ட செயலாளர், செங்குட்டுவன், தலைமை செயற்குழு உறுப்பினர், நவாப், ஒன்றிய செயலாளர் அரியப்பன், உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  அரசு தரப்பில் தகுந்த ஆதாரங்கள் உடன் குற்றம் நீருப்பிக்க படாததால் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர், முல்லைவேந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப் உட்பட 10 பேரையும் விடுதலை செய்தார். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், தலைமையில் இனிப்புகள் வழங்கிய பின்னர்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் : ஆ.குமரேசன்

First published:

Tags: Krishnagiri, Local News