முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / இதுக்கு போய் சாகலாமா? தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடை காவலரை மீட்க போராடிய சக போலீஸ்!

இதுக்கு போய் சாகலாமா? தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடை காவலரை மீட்க போராடிய சக போலீஸ்!

ஆயுதப்படை காவலர் தற்கொலை மிரட்டல்

ஆயுதப்படை காவலர் தற்கொலை மிரட்டல்

Krishnagiri | 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆயுத படை காவலர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரியில் ஆயத்தப்படை காவலர் ஒருவர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி ஆயுதப் படையில் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மணி என்பவர்  காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகம் பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது  ஏறி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய விருப்பமின்றி தன்னுடன் சேர்த்து 8 பேரை கோயமுத்தூருக்கு பணி மாற்றம் செய்துள்ளதாகவும், தாங்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து இப்போதுதான் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

எந்த தவறும் செய்யாமல் பணியில் சேர்ந்த  2 மாதங்களிலேயே பணி மாறுதல் செய்வதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் தரக்குறைவாக நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிக பனிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை கீழே இறங்கி வர சொல்லி வலியுறுத்தினர். ஆனால், அவர் வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு  பணி இட மாறுதல் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசி மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையில்  சுமூகம் ஏற்பட்டதால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மணிவேல் என்ற ஆயுதப்படை காவலர் தீயணைப்பு துறை காவலர்கள் மூலம் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.

First published:

Tags: Crime News, Krishnagiri, Local News