கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சினம்மா என்ற மேரியம்மா. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மேரியம்மா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஓடிசாவை சேர்ந்த பிரமோத் ஜனா என்ற சோனுவுக்கும் மேரியம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சோனு மத்திகிரி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சோனுவுக்கும், மேரியம்மாவுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் மேரியம்மாவுக்கு பணம் உதவியும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி மேரியம்மா தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவம் இடத்துக்கு வந்த மத்திரிகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மண்வெட்டியால் மேரியம்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எதற்காக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது என விசாரணையை தொடங்கிய போலீசார் மேரியம்மாவின் கள்ளக்காதலன் சோனுவை தேடி சென்ற போது தான் பணியாற்றும் நிறுவனத்தில் எந்த தகவலும் கூறாமல் அவர் தலைமறைவானது தெரியவந்தது.
Also Read: புழல் சிறையில் மோதலில் ஈடுபட்ட பெண் கைதிகள்... விலக்க சென்ற வார்டனுக்கு அடி, உதை!
இதனையடுத்து சோனுயை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் மார்பி பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்றனர். அவர்கள் அம்மாநில போலீசார் உதவியுடன் பிரமோத் ஜனாவை கைது செய்தனர்.
பின்னர் அங்குள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நேற்று பிரமோத் ஜனாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஓசூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேரியம்மாவுக்கும் தனக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக வீட்டில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது மேரியம்மா பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மேரியம்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போலீசுக்கு பயந்து தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.பின்னர் போலீசார் பாதுகாப்புடன் பிரமோத் ஜனாவை சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: செல்வா (ஓசூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Hosur, Illegal affair, Illegal relationship, Krishnagiri, Local News