ஓசூரில் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் மாதேஷ்(57), இவரது மனைவி கலைவாணி(42), இவர்களுக்கு பரத் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணமான நிலையில் பரத் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு மாதேஷ் அவரது மனைவி கலைவாணி அவரது மகன் பரத் ஆகியோர் ஒன்றாக உணவு சாப்பிட்டு உள்ளனர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மாதேஷும் அவரது மனைவி கலைவாணியும் வீட்டிலிருந்து வெளியே வராமல் தூங்கி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் அவர்களை எழுப்பி உள்ளார். அப்போது இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசார் வீட்டில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைக்க முடியவில்லை. மனைவி கலைவாணி தொடர்ந்து உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டோம். எங்களது உயிரிழப்புக்கு யாரும் காரணம் இல்லை” என கடிதத்தில் எழுதி வைத்து விட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
கடிதத்தை கைப்பற்றி ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூரில் குடும்ப தகராறு காரணமாக கணவன். மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : செல்வா - ஓசூர்
தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Krishnagiri, Local News