ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சுத் திணறி உயிரிழப்பு.. ஓசூரில் அதிர்ச்சி!

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சுத் திணறி உயிரிழப்பு.. ஓசூரில் அதிர்ச்சி!

பிரியாணி

பிரியாணி

பிரியாணி சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்து திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Hosur, India

ஓசூர் அருகே கடையில் வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட வாலிபர் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா லக்கம்பட்டி காலனியில் வசித்து வந்தவர் அருண்குமார்(24). இவர் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் தனியாக வீடு எடுத்து தங்கி பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் நண்பர்களுடன் கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பிறகு சிறுது நேரத்தில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட நண்பர்கள் பிரியாணி உடலுக்கு சேரவில்லை என கூறி கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் அவருக்கு  வாந்தி எடுத்த சிறுது நேரத்தில் மூச்சு திணறலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க | ஊர் ஊராய் நகை கடைகளில் திருடும் தாய் மகன்.. திருட்டு வாகனத்தில் வருவதே வழக்கம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், பிரியாணி சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Biriyani, Crime News, Death, Hosur, Local News