முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / ஓசூரில் களைகட்டும் 15 நாள் மலைக்கோயில் திருவிழா! - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஓசூரில் களைகட்டும் 15 நாள் மலைக்கோயில் திருவிழா! - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

Hosur Festival | ஓசூரில் உள்ள மலைக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் மலையிறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோயிலின் 15 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

திருவிழாவின் முதல் நாள் இரவு மலையில் இருந்து இறங்கி வந்த உற்சவ மூர்த்தி சந்திர சூடேஸ்வரர் மரகதாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக திருவிழா தொடங்குவதற்கு முன்பாக அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுக திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் களைகட்ட திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Festival, Hosur, Local News, Temple