முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கூட்டம்கூட்டமாக தஞ்சமடைந்த யானைகள்... ஓசூரில் பதற்றம்!

கூட்டம்கூட்டமாக தஞ்சமடைந்த யானைகள்... ஓசூரில் பதற்றம்!

யானைகள் தஞ்சம்

யானைகள் தஞ்சம்

hosur elephants | வனத்துறையினர் வெடிகளை வெடித்து யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur | Krishnagiri

ஓசூர் அருகே சானமாவு  வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 18 யானைகள், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இந்த யானைகள் பகலில் வனத்திலும், இரவில் வனத்தைவிட்டு வெளியேறி கிராம பகுதிகளில் நுழைந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 18 யானைகள், நாயக்கனப்பள்ளி கிராம பகுதியில் விவசாய நிலங்களில் இருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை பட்டாசுகள் வெடித்து சானமாவு வனத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து மேலும் 40க்கும் மேற்பட்ட யானைகள், சானமாவு வனத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. தற்போது 60 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தை ஓட்டியுள்ள விளை நிலங்களில் பீன்ஸ், தக்காளி,  வாழை, உள்ளி்ட்ட காய்கறி பயிர்களை சேதப்படுத்தியதால், கிராம மக்கள், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டனர் ஆனால் அவைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிவதால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் நாளை விரட்டும் பணியை தொடங்குவதாக வன அலுவலர் தெரிவித்தார்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Elephant, Hosur, Krishnagiri, Local News