ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஓயின் ஷாப்பில் தகராறு.. கார் டிரைவரை வெட்டிக்கொன்ற ரவுடி- கர்நாடகாவில் நண்பர்களுடன் கைது

ஓயின் ஷாப்பில் தகராறு.. கார் டிரைவரை வெட்டிக்கொன்ற ரவுடி- கர்நாடகாவில் நண்பர்களுடன் கைது

ரவுடி கைது

ரவுடி கைது

Crime News : ஓசூரில் கார் டிரைவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hosur, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே கார் டிரைவரை கொலை செய்த கர்நாடகா மாநில ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தொட்டதோகூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார் (30). கார் டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி  சுஷ்மா என்ற மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தை ஓன்றும் உள்ளது. சாந்தகுமார் கடந்த நவம்பர் 13-ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில் மது அருந்த சென்றுள்ளார். அதே ஒயின்ஷாப்பில் பல்வேறு கொலை , கொள்ளை , வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய வீர்சந்திரா கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி நேபால் மஞ்சுநாத் (வயது 31) என்பவர் மது அருந்த வந்துள்ளார்.

அப்போது சாந்தகுமாருக்கும், மஞ்சுநாத்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த நேபால் மஞ்சுநாத்தை சாந்தகுமார் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத் நான் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சாந்தகுமார் எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Read: தந்தையின் தலையை தனியாக எடுத்து தூர வீசிய மகன்.. டெல்லி க்ரைமில் அதிர்ச்சி வீடியோ!

இதுகுறித்து தகவல் அறிந்த மஞ்சுநாத் , சாந்தகுமாரை அழைத்து நான் உன்னை மன்னித்து விடுகிறேன். காவல்நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள் எனக் கூறியுள்ளார். மேலும் சாந்தகுமாரை கடந்த 24 ம் தேதி ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளிக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு வந்த சாந்தகுமாரை தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்ற நேபால் மஞ்சுநாத் தளி அருகே உள்ள எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரி கரையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிசென்றார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி நேபால் மஞ்சுநாத், பெங்களூரு மங்கம்மாபாளையத்தை சேர்ந்த சதிஷ் வயது 22, பன்னார்கட்டாவை சேர்ந்த சுனில்குமார் வயது 19, ஆகிய 3 பேரை தளி போலீசார் கைது செய்தனர்,பின்னர் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்.

செய்தியாளர் : செல்வம் (ஓசூர்)

First published:

Tags: Crime News, Hosur, Local News, Murder, Tamil News