கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முன் விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார். இவர் வெளியூரில் வேலைக்கு சென்றபோது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் ஈஸ்வரன் வீட்டில் உள்ளவர்களுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரு வீட்டாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் ஈஸ்வரனின் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஈஸ்வரன் குடும்பத்தை சேர்ந்த சசிக்குமார், தாமோதரன், குரு ஆகிய மூன்று பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஜாமீனில் வெளிவந்த இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை... பழிக்குப்பழியாக அரங்கேறிய கொலையா?
மேலும் இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து ஈஸ்வரன் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்தங்கரை போலீசார் மணி, சேட்டு, பூவரசன் உள்ளிட்ட 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் மணி என்பவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதால் தலைமறைவாக உள்ள மணியை போலீசார் தேடிவருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஆ.குமரேசன் - கிருஷ்ணகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attack, CCTV Footage, Krishnagiri