Home /News /krishnagiri /

கோவா ட்ரீப்... இன்னோவா கார்... ராணுவ வீரர்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி

கோவா ட்ரீப்... இன்னோவா கார்... ராணுவ வீரர்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி

ராணுவ வீரர்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி

ராணுவ வீரர்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி அரங்கேற்றப்பட்டிருப்பதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    கோவா ட்ரீப்...அடுத்த டார்கெட் முடிச்சா தாய்லாந்து ...அதையும் முடிச்சா ரூ.30 லட்சம் இன்னோவா கார் இலவசம்.... இப்படி தாரு மாறாக ஊதார் விட்டு ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து ரூ. 1000 கோடி வரை மோசடியை அரங்கேற்றியுள்ளதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருண்குமார் என்பவர் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ரூபாய் 7,70,000 டெபாசிட் செய்தால் வாரம் ஒருலட்ச ரூபாய் கிடைக்கும் என்று பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை கிராம மக்களிடம் பரப்பப்பட்டுள்ளது.

    இதை நம்பிய முன்னாள் ராணுவ வீரர்களான நந்தகுமார்,ஷங்கர், ஞானசேகர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாக சேர்ந்ததாக சொல்லப்படுகின்றது. புதிய ஆட்களை சேர்ந்து விட்டு அவர்களை ரூபாய் 7,70,000 அதற்கு மேல் உள்ள திட்டங்களில் சேர்த்து விட்டால் ஆட்கள் சேர்த்து விடுவதற்கு ஏற்ப கமிஷன் தொகையும் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கும்பல் ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து தங்கள் திட்டங்களை விளம்பரம் செய்துள்ளது. அத்துடன் கோல்ட், டைமண்ட், பிளாட்டினம் என்ற திட்டங்களும் ,பணம் கட்டிய சில நாட்களில் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டமும் ,சிலருக்கு இன்னோவா கார் கொடுப்பது ,தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு டூர் போவது என்று பணம் கட்டிய ஆறு மாதங்கள் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டங்களை நம்பி பலர் லட்சக்கணக்கில் திட்டங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால் ஆறுமாதங்கள் தான் இந்த ஆடம்பரம் எல்லாம், அதன் பின்னர் வாரம் வாரம் வரும் தொகை குறைய தொடங்கியுள்ளது.

    அத்துடன் சில நாட்களிளையே நிறுவனம் இருந்த இடத்தில் வெறும் காலி கடை தான் இருந்துள்ளது .நிறுவனத்தின் உரிமையாளரான அருண் குமாரும் தலைமறைவாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முகவர்களாக செயல்பட்ட நந்தகுமார், ஷங்கர், ஞானசேகர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோரிடம் முறையிட்டு கேட்டுள்ளனர்.

    ALSO READ |  திமுக அரசு மனசாட்சியோடு யோசிங்க - மின்கட்டண உயர்வு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்

    ஆனால் நாங்களும் முகவர்களாக தான் பணியாற்றினோம் எங்களுக்கு எதும் தெரியாது என்று அவர்கள் கைவிரித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஆயிரம் கோடிவரை மோசடி நடந்திருப்பதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்திலும் முறையிட்டு தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர்.

    ஆறு மாதத்தில் விளம்பரத்தை மட்டும் மூலதனமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தை நம்பி, லட்சக்கணக்கில் பணத்தை போட்டு கோவா,தாய்லாந்து சுற்றலாம் என்ற பேராசை கனவில் இருந்தவர்கள் தற்போது புகார் கடிதங்களை எடுத்துக்கொண்டு அழைந்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Krishnagiri

    அடுத்த செய்தி