ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

யானைக்குட்டி இறந்துடுச்சு... இரவோடு இரவாக நிலத்தில் புதைத்த விவசாயி.. தேடிப்பிடித்த வனத்துறை!

யானைக்குட்டி இறந்துடுச்சு... இரவோடு இரவாக நிலத்தில் புதைத்த விவசாயி.. தேடிப்பிடித்த வனத்துறை!

குட்டி ஆண் யானை பலி

குட்டி ஆண் யானை பலி

சட்டவிரோதமாக விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானையை யாருக்கும் தெரியாமல் தனது நிலத்திலையே குழித்தோண்டி புதைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊடேதுர்க்கம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். அதே கிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள 4 ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த கிராமத்தின் விளைநிலப்பகுதிகளை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

  அதனால் விவசாயிகள் சிலர் தங்கள் நிலத்தில் சட்டவிரோந்தமாக மின்வேலிகளை அமைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு விவசாயி எல்லப்பனுக்கு சொந்தமான விளைநிலத்தில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அப்போது சட்டவிரோதமாக எல்லப்பன் பதித்துவைத்திருந்த மின்வேலியில் சிக்கிய 6 வயது ஆண் யானை, சம்பவ இடத்திலையே துடிதுடித்து உயிரிழந்தது.

  இதைபார்த்து அதிர்ச்சியடைந்த எல்லப்பன் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் சம்பவத்தை மறைக்க முயன்றுள்ளார். உறவினர் நான்கு பேருடன் சேர்ந்து தனது நிலத்திலையே குழித்தோண்டி யானையை இரவோடு இரவாக புதைத்துள்ளனர்.

  இந்த விவகாரம் மறுநாள் வனத்துறையினருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் எல்லப்பனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யானை விளைநிலத்தில் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

  ' isDesktop="true" id="842817" youtubeid="zYw7uwyLntk" category="krishnagiri">

  வனத்துறையினர் யானை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் யானையின் தந்தம் உடலிலையே இருந்ததால், யானை தந்தத்திற்காக கொலை செய்யப்படவில்லை என்பதை வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

  Also see... உதகையில் திடீரென வீடுகளில் ஏற்படும் விரிசல்.. கிராம மக்கள் அச்சம்... ஆய்வில் இறங்கிய புவியியல்துறை!

  இதையடுத்து எல்லப்பன் மீது வனவிலங்கை கொலை செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யது கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த அவரின் மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகியோரும் கைது செய்யப்ப்டடனர்.

  குழி வெட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சட்டவிரோதமாக மின் இணைப்பு திருடப்பட்ட கம்பிகள் உள்ளிட்டவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

  வனவிலங்குகளால் சேதமடையும் விளைநிலத்திற்கு ஏக்கருக்கு ரூ 25 வரை இழப்பீடு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள வனத்துறையினர் வனவிலங்குகளை விரட்டுவதற்காக சட்டவிரோதமாக மின்வேலிகளை அமைக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Crime News, Elephant, Farmers, Krishnagiri