ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.. வனத்துறையினர் அச்சம்!

கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.. வனத்துறையினர் அச்சம்!

யானைகள் முகாம்

யானைகள் முகாம்

Krishnagiri | சுங்க சாவடியை கடக்க முயற்சிக்கும் யானைகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri | Krishnagiri

  கிருஷ்ணகிரி அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானைகளை தடுத்து நிறுத்தியதால், யானைகள் முகாமிட்டு நிற்கிறது.

  கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே பையனப்பள்ளி கிராம  மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை நேற்று இரவு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

  திடீரென பெய்த மழையால் யானைகள் விரட்டும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. அதன் பிறகு வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

  ஆனால் எதிர்பாராத விதமாக வனப்பகுதிக்குள் செல்லாமல் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. சோமார்பேட்டை, குல்நகர், வெங்கட்டபுரம் உள்ளிட்ட 3 கிராமங்கள் அடங்கியதால் வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

  தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசுகளை போட்டு யானைகளை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானைகள் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பின்புறம் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்வதால் வனத்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

  தற்போது சுங்கச்சாவடி பின்புறம் உள்ள யானைகளை கிருஷ்ணகிரி வனசரகர் மகேந்திரன் ராயக்கோட்டை வனசரக சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி 

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Krishnagiri