Home /News /krishnagiri /

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

Krishnagiri | தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் வினாடிக்கு 7400 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த மே மாதம் முதல் பெய்த மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வந்த நீர் உபரி நீராக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியான நந்தி மலை, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி கே ஆர் பி அணைக்கு வினாடிக்கு 7,129 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் 51 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீராக பிரதான மதகுகளின் வழியாக வினாடிக்கு 7,428 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் மூன்றாவது முறையாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஆற்றங்கரையை கடக்கவும் குளிக்கவும் கூடாது என்றும் கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    Also see... கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    மேலும் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளதால் கேஆர்பி அணையின் பூங்கா பகுதிக்கு செல்லக்கூடிய தரைப்பாளத்தின் மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் கேஆர்பி அணைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: ஆ.குமரேசன்,கிருஷ்ணகிரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood alert, Heavy rain, Krishnagiri

    அடுத்த செய்தி