Home /News /krishnagiri /

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian | தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்பது போலியாக கற்பனையாக பரப்பப்பட்டு வரும் செய்தி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியாக கற்பனையாக பரப்பப்பட்ட செய்தியாகும் என்று ஓசூரில் பேசிய  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் பேரண்டப்பள்ளி, அத்திமுகம், படிக்கல் கோட்டை உளிமங்கலம், தளி, வி.மாதேப்பள்ளி ஆகிய பகுதிகளில் ரூபாய் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்பது போலியாக கற்பனையாக பரப்பப்பட்டு வரும் செய்தி. பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நேரடியாக நாங்கள் கால ஆய்வு செய்து வருகிறோம்.  அங்கு இது போன்று மருந்துகள் தட்டுப்பாடு எதுவும் இல்லை" என தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Krishnagiri, Ma subramanian, Medicine

    அடுத்த செய்தி